தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆயுதக் கப்பல்களைக் கையாள மாட்டோம் என தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர்கள் உறுதிமொழி போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

31 Oct 2026, 10:38 pm
ஆயுதக் கப்பல்களைக் கையாள மாட்டோம் என தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர்கள் உறுதிமொழி போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆயுதக் கப்பல்களைக் கையாள மாட்டோம் என தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர்கள் உறுதிமொழி

போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, அக்.31-உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும். வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆயுதக் கப்பல்களைக்கையாளமாட்டோம் என்று வலியுறுத்தி தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு துறைமுகத் தொழிலாளர்கள் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் ஆர்ப்பாட்டம் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் தலைமையில் நடைபெற்றது.

துறைமுக ஜனநாயக ஊழியர்கள் சங்கம் மற்றும் பார்வேர்ட் சீமென் யூனியன் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர்களால் ஆயுதமற்ற துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் வணிகக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர் ரசல் கூறுகையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம், ரஷ்யா – உக்ரைன் மற்றும் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் உள்ளிட்ட மோதல்களில் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழப்பதும், பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

ஆயுதமற்ற தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, சர்வதேச தொழிற்சங்கங்களின் சம்மேளனமான World Federation of Trade Unions சார்பில் உலகம் முழுவதும் 151 துறைமுகங்களில் போர் எதிர்ப்புபோராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 15 துறைமுகங்களில் நீர்வழிப் போக்குவரத்து சம்மேளனம் மற்றும் Forward Seamen’s Union சார்பில் போருக்கு எதிரான இயக்கங்கள் நடத்தப்பட்டு , அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும், வெளிநாடுகளில் மனித உயிர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்களை இந்தியத் துறைமுகங்கள் வழியாகக் கையாளுவதற்கு துறைமுகத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் , இதுபோன்ற ஆயுதப் போக்குவரத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் லேபர் டிரஸ்டி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் நாகராஜ், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.