தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

5 Jun 2026, 11:05 pm
தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
<p><strong>தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 5- பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 10-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. ஒரு சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ஆம் தேதி சுமார் 50 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். வருகிற 10-ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். நாளை (சனிக்கிழமை), வருகிற 7-ஆம் தேதி, 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை செல்லும் வழியில் சுமார் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) நாளை, வருகிற 13-ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 7-ஆம் தேதி, 11-ஆம் தேதி, 14-ஆம் தேதி, 18-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதிகளில் செல் லும் வழியில் சுமார் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.17616) வருகிற 10-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே, மதுரை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.