தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொய்வழக்கை திருப்பப்பெறு – கனிம வளக்கொள்ளையை தடுத்திடு

3 Jan 2026, 2:20 pm
பொய்வழக்கை திருப்பப்பெறு – கனிம வளக்கொள்ளையை தடுத்திடு
<p><strong>பொய்வழக்கை திருப்பப்பெறு &ndash; கனிம வளக்கொள்ளையை தடுத்திடு</strong></p> <p>சேலம், ஜன. 3- கல்வராயன் மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்கு களை திரும்பப் பெறக் கோரியும், கனி மக் கொள்ளையை தடுக்கத் தவறிய &nbsp;வருவாய்த்துறை மற்றும் காவல் துறையை கண்டித்தும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் கருமந் துரையில் சனியன்று மாபெரும் கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;பொதுநலனுக்காகப் போராடும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கு களை உடனடியாக திரும்பப் பெற &nbsp;வேண்டும். உள்நோக்கத்துடன் பொய் &nbsp;புகார் அளித்த குறுவட்ட அளவர் பிரேம் &nbsp;மற்றும் அவருக்கு துணை நின்ற காவல் துறையினர் மீது துறை ரீதியான &nbsp;நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல் வராயன் மலைப் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெறும் கருப்புக்கல் மற்றும் கனிமக் கொள்ளைகளுக்கு வரு வாய்த்துறை துணை போவதை நிறுத்த &nbsp;வேண்டும். போலி கிரயப் பத்திரங்கள் &nbsp;மூலம் அபகரிக்கப்பட்ட மலைவாழ் மக் களின் நிலங்களை மீட்டு, முறையான &nbsp;நில உரிமையை உறுதி செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, கருமந்துரை காவல் &nbsp;நிலையம் அருகிலிருந்து நூற்றுக்கணக் கான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு வர்கள் என பெருந்திரளான மலை வாழ் மக்கள், தங்கள் நில உரிமையை &nbsp;நிலைநாட்டவும், அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக முழக்கங் களை எழுப்பியபடி ஊர்வலமாக கருமந் துரை நகரின் முக்கிய வீதிகள் வழி யாக சென்றனர். மலைக் கமிட்டி தலை வர் சின்னமணி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துகண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் &nbsp;தலைவர் பி. டில்லிபாபு, மற்றும் பொதுச் &nbsp;செயலாளர் ஆ. பொன்னுசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தலைவர்கள் பேசுகையில், &ldquo;இயற்கை வளங்களையும், பூர்வகுடி மக்களின் நிலங்களையும் அதிகார வர்க் கமும், நில மாஃபியாக்களும் கைகோர்த்துக்கொண்டு சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நியாயம் கேட்கும் நிர்வாகிகள் மீது &nbsp;பொய் வழக்குப் போடுவது ஜனநாயக &nbsp;விரோதமானது. அரசு உடனடியாக தலையிட்டு மலைவாழ் மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் &nbsp;கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட் டால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கிப் போராட்டம் நீடிக்கும் எனச் சங்க நிர்வாகிகள் எச் சரித்தனர். ஆர்ப்பாட்டத்தில், &nbsp;தவிச மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் இடைக்கமிட்டி செயலாளர்கள் பாக்கியராஜ் (கல்வராயன் மலை), முருகேசன் (ஆத்தூர்), அண்ணாமலை (வெள்ளிமலை), ஆறுமுகம், (பெத்த நாயகன் பாளையம்) மற்றும் டிஎன்டிஏ &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ண மூர்த்தி, மலைக்கமிட்டி நிர்வாகிகள் &nbsp;தர் மலிங்கம், மாதேஷ்வரன், பிரகாஷ் (மலையாள பேரவை) உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.