குதிரைச்சாலையை தார் சாலையாக மாற்றிடுக
22 Dec 2025, 4:02 am
<p>நாமக்கல், டிச.22- கொல்லிமலையில் குதிரை சாலையை சீரமைத்து தார் சாலை யாக மாற்றித்தரக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சிசியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்ற னர். தங்கள் பகுதியில் இருந்து நாமக்கல் நகரத்திற்கு வரவேண் டும் என்றால் சுமார் 90 கிலோ மீட்ட ருக்கு மேல் பயணம் செய்ய வேண் டிய நிலை உள்ளது. ஆபத்து, விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மருத்துவம னைக்கு செல்லக்கூடிய வழியில் மரணம் நிகழ்வது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. மேலும் விவ சாயிகள் விவசாய விளைப் பொருட் களை சந்தைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த பொருள் மற்றும் நேர விரயம் ஏற்படுகி றது. குறிப்பாக சேலூர் நாடு மணப் பாறை சந்தையில் இருந்து மேற்படி குதிரை சாலைக்கு வருவதற்கு 2 கிலோமீட்டர் தூரமே உள்ளது. இப் பொழுது நீண்ட தூரம் பயணித்து மேற்படி சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நாடு குளிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக அமைந் துள்ள பிரிட்டிஷர் காலத்தில் உள்ள குதிரை சாலை 34 கிலோ மீட்டர் தூரமே ஆகும். இந்த சாலையை சீர மைத்து தார் சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மலை வாழ் மக்கள் திரளானோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.</p>
