தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை கொளத்தூர்- ஸ்ரீனிவாச நகர் மெட்ரோ வழித்தடத்தில் டிசம்பரில் சுரங்கப் பணி தொடக்கம்

10 Nov 2025, 5:08 pm
சென்னை கொளத்தூர்- ஸ்ரீனிவாச நகர் மெட்ரோ வழித்தடத்தில் டிசம்பரில் சுரங்கப் பணி தொடக்கம்
<p><strong>சென்னை கொளத்தூர்- ஸ்ரீனிவாச நகர் மெட்ரோ வழித்தடத்தில் டிசம்பரில் சுரங்கப் பணி தொடக்கம்</strong></p> <p>சென்னை, நவ. 10- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் கொளத்தூர் முதல் ஸ்ரீனிவாச நகர் வரையிலான சுரங்கப்பணி அடுத்த மாதம் டிசம்பரில் தொடங்க உள்ளது. மொத்தம் 118.9 கி.மீ. நீளமுள்ள இரண்டாம் கட்டத் திட்டத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை நீளும் காரிடார்&ndash;5 பாதை 47 கி.மீ.் நீளத்துடன் மிகப்பெரியதாகும். இந்த பாதையில் ரெட்டேரி, கொளத் தூர், ஸ்ரீனிவாச நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இந்த கரிடாரின் சுரங்கப் பகுதி வெறும் 5.8 கி.மீ. நீளம்தான் என்றாலும், அது மிகுந்த தாமதத்துக்கு உள்ளானது. தொடக்கத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாலும், பின்னர் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாலும் பணிகள் தாமதமாகின. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது, இந்த பகுதி யில் சில குடியிருப்பு வாசிகள் அடித்தள சுரங்கப் பணி குறித்த எதிர்ப்பை வெளிப் படுத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் மெட்ரோ நிர்வாகம் கட்டுமானத் திட்டத்தின் வரிசையை மாற்றி அமைத்தது. திட்டம் தற்போது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக கொளத்தூர் ரேம்ப் முதல் கொளத்தூர் மெட்ரோ நிலையம் வரை சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்டமாக கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாச நகர் வரை பணிகள் துவங்கப்பட உள்ளன. முதல் கட்ட பணி பிப்ரவரி 2025இல் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்திற்குள் 246 மீட்டர் நீள சுரங்கப்பணி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது கட்டமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. ஆரம்பத்தில் செப்டம்பர் மாதம் துவங்க திட்டமிடப்பட்டு இருந்தாலும் சில தொழில்நுட்பக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. கொளத்தூர் முதல் ஸ்ரீனிவாச நகர் வரை சுமார் 1,000 மீட்டர் தூரத்தை சுரங்கப்பொறிகள் கடந்து முடிக்க சுமார் ஏழு மாதங்கள் ஆகும். இதன் முதல் இயந்திரம் ஜூலை 2026க்குள் ஸ்ரீனிவாச நகர் வரை சென்றடையும் என்றும், இரண்டா வது இயந்திரம் அதற்குப் பின் சில வாரங்க ளில் அதனைத் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரி வித்துள்ளனர். மொத்த பாதையில் முதல் 600 மீட்டர் பகுதி மண் மற்றும் மண்ணோடு கலந்த பாறை அடுக்குகளைக் கொண்டுள்ளது. அடுத்த 400 மீட்டர் பகுதி கிரேடு 4 பாறை அடுக்குகளால் ஆனது என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் சுரங்கப் பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளன. சுரங்கப்பணி நிறைவடைந்ததும், காரி டார்&ndash;5 வழியாக பயணிக்கும் மெட்ரோ இணைப்புகள் வடசென்னை முதல் தென் சென்னை வரை தொடர் இணைப்பை ஏற்படுத்தும். இது மக்களுக்கு போக்கு வரத்தை எளிதாக்குவதோடு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.