தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக பத்திரிகையாளர்களின் தலைவர் தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் காலமானார்!

27 Jun 2026, 10:16 pm
தமிழக பத்திரிகையாளர்களின் தலைவர் தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் காலமானார்!

தமிழக பத்திரிகையாளர்களின் தலைவர் தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் காலமானார்!

திருவாரூர், ஜூன் 27 - தமிழ்நாடு பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் (TUJ) மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ருமான தோழர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் (71) காலமானார்.

பத்திரிகையாளர் சங்கப் பணிக்காக திருவாரூர் மாவட் டத்திற்கு வருகை தந்தபோது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திரு வாரூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அனும திக்கப்பட்டார். சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முரு கையன், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் டி. லதா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகு ராமன், பா. கோமதி, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் ஆகியோர் சனிக்கிழமை காலை, மருத்துவமனைக்குச் சென்று தோழர் புருஷோத்த மனுக்கான சிகிச்சை விவ ரங்களை கேட்டறிந்தனர்.

எனினும், சிகிச்சை பல னின்றி, சனிக்கிழமையன்று பிற்பகல் மருத்துவமனையி லேயே தோழர் புருஷோத்த மன் காலமானார். தோழர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற முன்னாள் உறுப்பின ரும், களப்போராளியுமான தோழர் பி.எஸ். தனுஷ்கோடி யின் புதல்வர் ஆவார். அவ ருக்கு கிருஷ்ணவேணி என்ற துணைவியாரும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

தோழர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் உடல், அவரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பாங்கல் கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, தோழர் புருஷோத்த மன் உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி, ஐ.வி. நாகராஜன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. மாரி முத்து, மூத்த தலைவர் கோ. பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உள்ளிட்டோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க - வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், கட்சி தோழர்கள், செய்தியாளர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கைப்பேசி வாயிலாக தோழர் புருஷோத்தமன் குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்து பேசினர்.

கடைக்கோடி நிருபர்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டவர்!

தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவ ரான தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்க ளின் மகனும், தமிழ்நாடு பத்திரிகையா ளர்கள் சங்கத்தின் (TUJ) மாநிலத் தலை வருமான தோழர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் உடல்நலக் குறைவால் உயி ரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. '

இறுதிமூச்சு வரை பாடுபட்டவர் 'தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநில அலுவலகத் தில் அலுவலக செயலாளராகப் பணி யாற்றியவர். பின்பு ‘தினபூமி’ பத்திரிகை யில் நிருபராக பணியாற்றினார். தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டு பத்திரிகையாளர்களின் நலன்க ளுக்காக தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர்.

பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரும் இழப்பு!

குறிப்பாக, கிராமப்புற மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் கடைக்கோடி நிருபர்களுக்கும் அரசின் அனைத்து அங்கீகாரங்களும், சலுகை களும் கிடைப்பதற்கு அயராது போராடிய வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினராக செயல்பட்டு வந்த வர். அவரது மறைவு பத்திரிகையாளர்க ளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றி ருக்கும் அவரது இணையர், மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுத லையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.