தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேராசிரியர் கலையரசன் மீதான காவல் துறை நடவடிக்கை: தமுஎகச கடும் கண்டனம்!

30 Oct 2026, 10:34 pm
பேராசிரியர் கலையரசன் மீதான காவல் துறை நடவடிக்கை: தமுஎகச கடும் கண்டனம்!
<p><strong>பேராசிரியர் கலையரசன் மீதான காவல் துறை நடவடிக்கை: தமுஎகச கடும் கண்டனம்!</strong></p><p>சென்னை, அக். 30 –போலி இன்ஸ்டாகிராம் கணக்கு விவகாரத்தில் பொருளாதார ஆய்வாளர் பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் காவல்துறையினர் அத்துமீறி அழைத்துச் சென்று விசாரித்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் கருத்துரிமையை நசுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஊடகவியலாளர்கள் மீதான வழக்குகள், கலை நிகழ்ச்சிகளுக்குத் தடை, சுற்றறிக்கைகள் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தும் போக்கு ஆகியவை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இதன் தொடர்ச்சியாகவே, பொருளாதாரத் துறை ஆய்வாளர் பேராசிரியர் கலையரசன் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, பம்மல் காவல் நிலையப் பணியாளர்கள் எவ்வித முறையான அழைப்பாணையுமின்றிஅதிகாலையில் தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பல்லாவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறு பரப்பியதாகக் கூறி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர், அது அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி கணக்கு என்பது தெரியவந்ததை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.கருத்துலகத்தில் இயங்கும் அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கில் காவல்துறையைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், கலையரசனின் பெயரில் போலி கணக்கு தொடங்கிய குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.