தமுஎகச இலக்கிய சந்திப்பு
12 May 2026, 1:08 am
<p><strong>தமுஎகச இலக்கிய சந்திப்பு</strong></p><p>கோவை, மே 11- கோவையில் தமுஎகச சார்பில் நடைபெற்ற இலக் கிய சந்திப்பில் நூல்கள் அறிமுகம் செய்யப்பட் டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில், 271 ஆவது இலக்கிய சந்திப்பு மற்றும் நூல் அறிமுக விழா ஞாயிறன்று கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற் றது. இவ்விழாவிற்கு இரா.பானுமதி தலைமை வகித் தார். போ.கல்யாணி வரவேற்றார். இதில், ஆண்டன் செகாவ் எழுதிய “மனைவியை விற்றவன்” குறுநா வலை எழுத்தாளர் கோ.லீலா அறிமுக செய்ய, எழுத் தாளர் அவை நாயகன் ஏற்புரையாற்றினார். “பால் குளமும் பூவரச மரமும்” நாவலை முனைவர் இரா. பரிமளம் அறிமுக செய்ய, நூலாசிரியர் இராம தாசு ஏற்புரையாற்றினார். தொடர்ந்து “இதய மொழி யின் உதய ராகம்” எனும் கவிதை தொகுப்பை ஆ. கலைவாணி அறிமுக செய்ய, ர.மனோன்மணி ஏற் புரையாற்றினார். முடிவில், கி.பங்கஜவள்ளி நன்றி கூறினார். இந்நிகழ்வில், இலக்கிய சந்திப்பு ஒருங்கி ணைப்பாளர் தங்க முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
