தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமுஎகச கோவை மாவட்டக் குழுவின் புதிய அலுவலகம் திறப்பு

14 Jun 2026, 2:34 am
தமுஎகச கோவை மாவட்டக் குழுவின் புதிய அலுவலகம் திறப்பு

தமுஎகச கோவை மாவட்டக் குழுவின் புதிய அலுவலகம் திறப்பு

கோவை, ஜூன் 13– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவின் புதிய அலுவல கம் திறக்கப்பட்டது. கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் மைதானம் அருகே சனியன்று, சங்க மாவட்ட துணைத் தலைவர் தி. மணி தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளர் முனைவர் வெ. மைதிலி வரவேற்றார். தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் புதிய அலுவ லகத்தை திறந்து வைத்தார், பொதுச் செயலாளர் களப்பிரன் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல கத்தை மாநில துணைச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திறந்து வைத்தார். கூட்ட அரங்கை மாநிலப் பொருளாளர் கவிஞர் சைதை ஜே திறந்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மாவட்டக் குழுவிற்காக தனி அலுவல கம் அமைக்கப்பட்டுள்ளதாக பெரு மிதம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் சி.பத்மநாபன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயலாளர் அ. கரீம் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறை வாக மாவட்டத் தலைவர் எம். காளிநா தன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் தமுஎகச நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். புதிய அலுவலகம் மாவட்ட அளவி லான இலக்கிய, கலை மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் மையமாக செயல்படும் என நிர்வாகி கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.