தமுஎகச சார்பில் ‘நூறு சாமி’ திரைப்படக் கலந்துரையாடல்
3 Jul 2026, 11:29 pm

தமுஎகச சார்பில் ‘நூறு சாமி’ திரைப்படக் கலந்துரையாடல்

சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மத்திய சென்னை மாவட்டம் சார்பில், ‘நூறு சாமி’ திரைப்படக் கலந்துரையாடல் மற்றும் புதிய எம்.எம்.டி.ஏ. கிளை தொடக்க விழா கடந்த புதன்கிழமை (ஜூலை 1), சி.ஐ.டி.யு. மத்திய சென்னை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவ. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் நா. பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். இதில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், திரைக்கலைஞர் ரோகிணி, ‘நூறு சாமி’ திரைப்படத்தின் இயக்குனர் சசி, திரைக்கலைஞர் பாஸ்கர், பாடலாசிரியர் மோகன் ராஜ், துணை இயக்குனர் ஸ்ரீராம், தயாரிப்பு நிர்வாகி அண்ணாமலை, எழுத்தாளர்கள் ஜா. மாதவராஜ், அஜிதா மற்றும் சி.ஐ.டி.யு. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. முருகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ‘நூறு சாமி’ திரைப்படப் பாடலாசிரியர் உள்ளிட்ட பலர் தமுஎகச உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டெல்ஃபின் ராஜேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அண்ணா நகர் புதிய கிளையின் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி நன்றி கூறினார்.