முந்தய பக்கம்

காச நோய் விழிப்புணர்வு பேரணி

17 Feb 2026, 3:36 pm
காச நோய்  விழிப்புணர்வு பேரணி
<p><strong>காச நோய் &nbsp;விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>பெரம்பலூர். பிப்.17 : &nbsp;பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம், காசநோய் எதிர்ப்பு கடைப்பிடிப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பாலக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். &nbsp;பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. &nbsp;பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி, சங்குப்பேட்டை வரை சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 300&ndash;க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், காசநோய் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்திக் கொண்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். &nbsp;இப்பேரணியானது, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரையில் தொடங்கி சங்குப்பேட்டை, வழியாக வானொலி திடலில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, துணை இயக்குநர் (காசநோய்) மரு.ரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram