குதிரை பேரத்தில் முதல் குற்றவாளியே முதல்வர் தான்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
1 hour before
<p><strong>குதிரை பேரத்தில் முதல் குற்றவாளியே முதல்வர் தான்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு</strong></p><p>சென்னை, ஜூலை 2 - அதிமுகவிலிருந்து மேல்மட்ட தலைவர்கள் தொடங்கி அடிமட்ட நிர்வாகிகள் வரை கொத்துக் கொத்தாக விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில், “குதிரை பேரத்தில் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய் தான்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். காமராஜிடம் பேரம் பேசப்பட்டதே தமது குற்றச்சாட்டுக்குச் சாட்சி எனக் குறிப்பிட்ட தினகரன், மதிமுக எம்எல்ஏ-க்களிடம் பதவி விலகுமாறு விஜய் கூறியது வெளிப்படையான குதிரை பேரம் எனக் கடுமையாகச் சாடினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஒரு தூய சக்தி அல்ல, மாறாக மக்களை ஏமாற்றும் நாசகார சக்தி என விமர்சித்தார். அதிமுகவிலிருந்து தவெகவிற்குத் தாவியவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார் என்றும், கட்சி தாவியவர்கள், எடப்பாடி பழனி சாமியின் தலைமையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறுவது தமது தவறை மறைக்கும் நாடகம் எனவும் கூறினார். மேலும், முதல்வர் விஜய்யையே தோற்கடிக்கும் அளவிற்குத் தவெக அமைச்சர்கள் அதிகமாகப் பேசுவ தாகவும், ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டே ஆட்சியைத் தொடர்கின்றனர் எனவும் விமர்சித்த அவர், சட்டப் பேரவைத் தேர்தலில் விஜய்க்கு மக்கள் அறுதிப் பெரும்பா ன்மை அளிக்கவில்லை எனவும், சினிமாவில் பிரபலம் என்பதாலேயே அவருக்குத் தனிப்பெருங்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.</p>
