50 முறை ரத்தம் வழங்கிய டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் எத்திராஜனுக்கு அமைச்சர் பாராட்டு
6 Jul 2026, 12:07 am
<p><strong>50 முறை ரத்தம் வழங்கிய டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் எத்திராஜனுக்கு அமைச்சர் பாராட்டு</strong></p><p> சென்னை, ஜூலை 5- உலக குருதி கொடை யாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரத்ததானம் செய்த தன்னார்வலர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், இது வரை 50 முறை ரத்ததானம் செய்து, பலரது உயிரைக் காக்க உதவிய டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் இரா. எத்திராஜன் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டி னார். சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் அங்கீகா ரம் பெற்ற பயிற்சியாளரான இரா. எத்திராஜன், விளை யாட்டுத் துறையில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் முன்மாதிரியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ரத்ததா னத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடை பெற்ற இந்த விழாவில், பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p>
