டிரம்ப்பின் அடாவடி மிரட்டல்; மோடியின் மௌனம்
22 Jan 2026, 2:57 pm
<p><strong> டிரம்ப்பின் அடாவடி மிரட்டல்; மோடியின் மௌனம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.22– இந்தியப் பொருட்களுக்கு 500 சதவிகித வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடாவடி மிரட்டல் விடுத்திருப்பதைக் கண்டித்தும், இதற்கு எதிராக வாய்மூடி மௌனம் காக்கும் ஒன் றிய மோடி அரசு, ஏற்றுமதி தொழில் களைப் பாதுகாக்க உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஐ மாநகர் மாவட் டச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப் பாட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அடாவடித்தனத்தை கண்டித்தும், இந்திய தொழில் களையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கத் தவறிய மோடி அரசை கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பப்பட் டன. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால், சிபிஐ புறநகர் மாவட் டச் செயலாளர் கே.எம்.இசாக், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநில நிலைக்குழு உறுப்பினர் சங்கரப் பாண்டியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்ட அமைப்பு செய லாளர் ஜெ.பி.கார்த்திகேயன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். முடிவில், ப.மா.பாலமுருகன் நன்றி கூறினார். கோவை கோவை, சிவானந்தா காலனி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் தலைமை வகித் தார். இதில், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ், சிபிஐ துணைச்செயலாளர் சி.தங்க வேலு, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் கே.பாலசுப் பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறு முகம், மாவட்டச் செயலாளர் சி.சிவ சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
