தீக்கதிர் உலக செய்திகள்
11 May 2026, 10:17 pm

ஜி ஜின்பிங்கை சந்திக்க சீனா செல்லும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க மே 14–15 சீனா செல்கிறார்.அதற்கு முன்பாக, இரு நாடுகளின் உயரதிகாரிகள் மே 12–13 அன்று தென் கொரியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையை சீனாவின் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் வழிநடத்துகிறார். கடந்த முறை டிரம்ப்–ஜின்பிங் சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களை மேலும் மேம்படுத்துவதே இந்த ஆலோசனையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலக ஸ்டார்மர் மறுப்பு

பிரிட்டனில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அவர் கட்சித் தலைமைப்பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்புக்கு இணங்கி பதவி விலக மாட்டேன் என அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வேன் என்று அவர் திங்கட்கிழமை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

யுரேனியத்தை நெருங்கினால் கொலை - டிரம்ப் மிரட்டல்

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், இந்த விவகாரத்தை அமெரிக்க விண்வெளிப் படை (Space Force) கவனித்துக்கொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளருக்கு அவர் கொடுத்த பேட்டியில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை யாராவது நெருங்க முயன்றால், அமெரிக்கா அவர்களை சுட்டுக் கொலை செய்யும். ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈரானில் உள்ள “ஒவ்வொரு இலக்கையும்” தாக்கி அழிக்க எங்களுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே போதும் என்று அவர் பேசியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் இருப்பு வரலாறு காணா வீழ்ச்சி

உலகளாவிய எண்ணெய் இருப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக வேகமாகக் குறைந்து வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 25 வரையிலான காலப்பகுதியில், உலகளாவிய எண்ணெய் இருப்பு நாளொன்றுக்கு சுமார் 4.8 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் தடை தொடர்ந்தால், ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியான எண்ணெய் இருப்பு “செயல்பாட்டு அழுத்த நிலையை” எட்டும், செப்டம்பர் மாதத்திற்குள் “செயல்பாட்டு தரைமட்ட” நிலைக்குச் சென்றுவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இணைந்த கரங்கள் கார்ப்பரேட் ஆதரவு கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்

ரோம், மே 11- இத்தாலி பிரதமர் மெலோனி யின் வலதுசாரி அரசு அறிமுகப் படுத்தியுள்ள கார்ப்பரேட் ஆதரவு கல்விக் கொள்கைகளுக்கு அந் நாட்டு ஆசிரியர்களும் மாணவர் களும் இணைந்து எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகளில் பொதுக் கல்வியை குறைத்து, ஐரோப்பிய முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றியமைக்க மெலோனியின் அரசு திட்டமிட் டுள்ளது. உயர் பள்ளிகளில் ஐரோப்பிய காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் குறித்த விமர்ச னங்கள் தொடர்பான பாடங்களை நீக்கிவிட்டு, ஐரோப்பிய தேசிய வாத உணர்வை வலுப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றப் படவுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டாய ராணுவப் பயிற்சியை அறிமுகப் படுத்தும் திட்டமும் உள்ளது.

இரட்டை நிலைக் கல்விமுறை

தொழிற்கல்வி பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் தொழிலாளர் வர்க்க குடும்பங்க ளைச் சேர்ந்த மாணவர்களே. இவர்களுக்கு பொதுக் கல்வி குறைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு மட்டுமே தயார்ப் படுத்தும் பயிற்சி வழங்கப்படு கிறது. உயர் நடுத்தர வர்க்க மாண வர்கள் படிக்கும் உயர் பள்ளி களிலோ, தேசியவாதம் மற்றும் ஐரோப்பிய அடையாள உணர்வை வளர்க்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஒரு வர்க்கத் தின் குழந்தைகளை தொழிற்சா லைக்கும், மற்றொரு வர்க்கத்தின் குழந்தைகளை ஆட்சியாளர்களா கவும் தயார்ப்படுத்தும் இரட்டை நிலை கல்வி முறையை மெலோனி அரசு உருவாக்குகிறது” என்று போராட்டத்தை ஒருங்கிணைத்த அடிப்படை மட்டத் தொழிற்சங்கம் (Unione Sindacale di Base - USB) கல்விக்கொள்கை மாற்றத் தில் உள்ள அடிப்படை பிரச்சனை யை தெளிவாக விளக்கியுள்ளது.

இந்த கல்விக்கொள்கை யின்படி ஆசிரியர்களின் நிலையும் மோசமாகவே உள்ளது. பல ஆண்டுகளாக இத்தாலி அரசு கல்வித் துறையில் போதிய முத லீடு செய்யவில்லை. மேலும் கல் வித்துறையில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு பதிலாக திட்டமிட்டே தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்களை மட்டுமே பணி யமர்த்தியுள்ளது. பணவீக்கம் அதி கரித்து வந்த காலக்கட்டத்தில் கூட ஆசிரியர்களுக்கான ஊதியம் அதி கரிக்கப்படவில்லை. இது அவர் களை மேலும் அதிக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பள்ளிகளை ராணுவமய மாக்குதலுக்கு எதிராக, கட்டாய ராணுவ சேவைக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கக் குழந்தை களின் கல்வியை நேரடியாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக் கும் தொழிற்கல்வி சீர்திருத்தத் திற்கு எதிராக, அவமானகரமான ஊதியம் வழங்கும் ஒப்பந்தப் புதுப்பிப்பிற்கு எதிராக நாங்கள் வேலைநிறுத்தம் செய்கிறோம் என அறிவித்து ஆசிரியர்கள் மாண வர்கள் இணைந்து கைகள் கோர்த்து நாடு முழுவதும் மே முதல் வாரம் போராட்டம் நடத்தி னர். அத்துடன் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

போர்ப் பொருளாதார ஆயுதப்படையாக...

ஆசிரியர்களும் மாணவர் கர்களும் ஒன்றிணைவது வெறும் குறியீடு அல்ல, இது ஒரு உத்திரீதி யான போராட்டம். சமூகத்தை பாதிக்கும் அதே முரண்பாடுகள், சுரண்டல், தற்காலிக ஒப்பந்த பணிநியமனம், ராணுவமய மாக்கல், மூலதனத்திற்கு அடி பணிந்துபோவது என்ற அடி மைத்தனம் தற்போது கல்வித் துறையிலும் அதிகரித்து வரு கிறது என மாணவர்களும் ஆசிரி யர்களும் குற்றம் சாட்டி வரு கின்றனர்.

பொதுப் பள்ளி முறைகள் முழுவதும் உலகை ஆட்டிப் படைக்கும் போர் வெறிக்கருத் துக்களுக்கு கட்டுப்பட்டுவிட்டது. மாணவர்கள் போர்ப் பொருளா தாரத்திற்கான ஆயுதப் படையாக மாற்றப்படுகிறார்கள்” என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

இஸ்ரேலியர்க்கு தடை விதிக்க தயார்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரை உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளில் வன் முறையில் ஈடுபடும் இஸ்ரேல் குடிமக்கள் மீது தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா காலாஸ் தெரிவித்துள்ளார். பிரஸ் ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு கவுன்சில் கூட்டத்திற்கு முன்ன தாக காலாஸ் இதனை தெரிவித் துள்ளார். கடந்த காலத்தில் பல முறை தடுத்து நிறுத்தப்பட்ட இந்தத் தடை நடவடிக்கைகள் குறித்து, தற்போது ஐரோப்பிய அமைச்சர் கள் ஓர் அரசியல் உடன்பாட்டை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.