அமெரிக்காவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விமானத் தளத்திற்கே சென்று டிரம்ப் வரவேற்பு!
24 Sept 2026, 9:52 pm

அமெரிக்காவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விமானத் தளத்திற்கே சென்று டிரம்ப் வரவேற்பு!

புதுதில்லி, செப். 24 -சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வியாழனன்று அமெரிக்கா சென்றடைந்தார். மேரிலாண்டில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆன்ட்ரூஸ் ராணுவ விமானத் தளத்தில் - தனி விமானத்தில் வந்திறங்கிய ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் சென்றுசிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு,அப்போதைய போப் பிரான்சிஸை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேரில் வரவேற்றார். அதன் பிறகு, 11 ஆண்டுகள் கழித்து,தற்போதுதான், அமெரிக்க ஜனாதிபதி விமான தளத்திற்கே நேரில் சென்று, வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மூன்று நாள்கள் பயணத்தில், டிரம்ப் - ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் வர்த்தகம், தொழில்நுட்பம், அரிய வகைகனிமங்கள் ஆகிய துறைகள் குறித்தும், அமெரிக்கா - சீனா இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும்பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.