ஐ.நா அவை மூலம் காசாவை கைப்பற்றும் டிரம்ப்
19 Nov 2025, 3:33 pm

ஐ.நா அவை மூலம் காசாவை கைப்பற்றும் டிரம்ப்

நியூயார்க்,நவ.19- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டம் தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு அவை ஏற்றுக்கொண் டுள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தத்தை ஏற் படுத்த முன்னெடுக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் போருக்குப் பிறகு காசா பகுதியை டிரம்ப் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் தலைமையி லான சர்வதேசக் குழு ஒன்று சர்வ தேச அமைதிப்படையின் மூலம் நிர்வ கிக்கும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். காசாவில் சர்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்ப தற்கான திட்டத்தை 15 உறுப்பு நாடு களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு அவையில் டிரம்ப் முன்மொ ழிந்தார். தீர்மானத்தின் மீதான வாக்கெ டுப்பில், 13 நாடுகள் ஆதரவு தெரி வித்தன. எதிர்ப்பு எதுவும் இல்லை. சீனா, ரஷ்யா ஆகிய இரு முக்கிய நாடு கள் வாக்களிக்காமல் அதே நேரத்தில் ரத்து செய்யும் அதிகாரத்தின் மூலம் தீர்மானத்தை வீட்டோ செய்யாமல் விலகிக்கொண்டன. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதன் மூலம், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டிரம்ப்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த அமைதித்திட்டம், காசாவை “மறுசீர மைக்கப்பட்ட, பயங்கரவாதம் அல்லாத மண்டலமாக” மாற்றி, அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கும் வகை யில் மாற்றியமைப்பதை உறுதி செய்கிறது. மேலும், இந்த தீர்மான நிறை வேற்றத்தின் மூலம் காசாவில் புதிய அரசு அமையும் வரை ஆட்சி மாற்றத்தைக் கண்காணிப்பதற்காக வெளிநாட்டினரை உள்ளடக்கிய ‘அமைதி வாரியம்’ அமைக்கப்படு வதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரவேற்கிறது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்ட ரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்ட அறிக்கை யில், காசா தொடா்பான இந்தத் தீா்மான நிறைவேற்றம், அங்கு போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதில் முக்கியமான படி. அனைத்துத் தரப்பி னரும் இந்தத் தீர்மான அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

ஆக்கிரமிப்பு பயம் காசாவை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போகிறேன் என டிரம்ப் சில மாதங்களுக்கு முன் தெரிவித்தி ருந்த நிலையில் இந்தச் சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி காசா மற்றும் அதன் கடற்கரைப் பகு திகளை ஆக்கிரமிக்கும் அபாயமும் இதில் அடங்கியுள்ளது.

ரஷ்யா விமர்சனம் ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா இந்தத் தீர்மானம், ‘ஆராயாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல இந்த தீர்மானம் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாட்டுத் தீர்வுக்கு சாவு மணியாக இருந்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் காசாவை சா்வதேச அமைதிப் படையின் கைகளில் ஐ.நா. பாதுகாப்பு அவை ஒப்படைக்கிறது. அந்தப் படை எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து எதுவும் தெரியாத நிலை உள்ளது என அச்சத்தை எழுப்பியுள்ளார்.