தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்!

9 Oct 2026, 10:02 pm
தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்!

தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன், அக். 9அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் முடிந்த பிறகு ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்த உத்தரவிடப் போவதில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் அதிகரிக்கும் அதிருப்திஈரான் மீதான போருக்காக டிரம்ப் அதிக அளவிலான மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி வருகிறார். ஆனால், அமெரிக்க மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சினைகள், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பல நெருக்கடிகள் அந்நாட்டில் அதிகரித்துள்ளன.

இத்தகைய சூழலில், ஈரான் மீதான போர்த் தாக்குதல் தங்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்ற கருத்து அமெரிக்க மக்களிடையே உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே, தேர்தல் முடியும் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அவர் முடிவு செய்துள்ளதாக அவரது சமூக ஊடகப் பதிவு உணர்த்துகிறது.

முறிந்த ஒப்பந்தமும் தொடரும் பதற்றமும்போரில் 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை உருவாக்கவும் அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் மாதம் இடைக்கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. ஆனால், அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தியது.இதன் காரணமாக, சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் முக்கியப் பகுதியான ஹேர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் தனது ராணுவக் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. “அமெரிக்கா எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் இந்த நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக உள்ளோம்” என ஈரான் தெரிவித்தது. எனினும், அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து அமெரிக்கா தொடர்ந்து போர்ச் சூழலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.