இந்தியா மீது 500% வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி டிரம்ப் அடாவடி
8 Jan 2026, 2:44 pm

இந்தியா மீது 500% வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி டிரம்ப் அடாவடி

வாஷிங்டன், ஜன. 8 - ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியா மீது 500 சதவிகிதம் வரி விதிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வ தற்கும், டிரம்ப் ஒப்புதல் வழங்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே இந்தியா மீது டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள் ளார். இதில் 25 சதவிகிதம் ரஷ்யா விடம் கச்சா எண்ணெய் வாங்கு வதற்கான அபராதம் என்ற பெயரில் விதிக்கப்பட்ட வரியாகும். இதனால், இந்தியாவின் ஜவுளி, தோல் ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல லட்சம் பேர் வேலையிழப்பைச் சந்தித்து வருகின்றனர். பிரதமர் மோடி இந்தப் பிரச்சனையைக் கண்டுகொள்வதாக இல்லை. தமக்கும் டிரம்பிற்கும் நல்ல நட்பு இருப்பதாக கூறிக்கொண்டாலும், வரி விதிப்பைக் குறைக்க டிரம்புடன் பேசுவதற்கு பிரதமர் மோடி முன்வரவில்லை. இதுபற்றி வாய் திறப்பதற்கே அஞ்சிக் கொண்டிருக்கிறார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், “இந்தியா என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம், ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்” என்று மிரட்டல் விடுத்தார். இந்த முறையும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதா ஒன்று, அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 2030-க்குள் இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா செய்யும் கச்சா எண்ணெய் இறக்கு மதியால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், 2021-இல் சுமார் 13 பில்லியன் டாலராக இருந்தது, 2024-25-இல் கிட்டத்தட்ட 69 பில்லியன் டாலராக (ஐந்து மடங்குக்கும் மேலாக) அதிகரித்தது. ஆனால், டிரம்ப்பின் மிரட்ட லைத் தொடர்ந்து, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை மோடி அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, இரு தரப்பு வர்த்தகம் ஏப்ரல் - ஆகஸ்ட் 2025 காலகட்டத்தில் 28.25 பில்லி யன் டாலராகக் குறைந்தது. அப்படி யும் டிரம்ப் விடுவதாக இல்லை. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் 500 சதவிகிதம் வரி விதிப்போம் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார்.