ஹோர்முஸை கடக்க அமெரிக்காவுக்கு 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்! உலக நாடுகளை மிரட்டும் டிரம்ப்
14 Jul 2026, 9:03 pm

ஹோர்முஸை கடக்க அமெரிக்காவுக்கு 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்! உலக நாடுகளை மிரட்டும் டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை 14 - ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் பணிக்காக, உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 20 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, அமெரிக்கா மீண்டும் தனது அடாவடித் தாக்குதலை துவங்கியுள்ள பின்னணியில், தனது கட்டுப்பாட்டில் உள்ள - உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல் போக்குவரத்து வழித்தட மான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்ட தாக ஈரான் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், சரக்குக் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்றும் இதற்காக உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 20 சதவிகிதம் கட்ட ணம் செலுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும். ஆனால் ஈரானுக்கு எதிராக மட்டும் கடல்வழி முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்துகிறது. மற்ற நாடுகள் இப்பாதையை நியாய மான மற்றும் தடையற்ற முறையில் பயன் படுத்திக் கொள்ளலாம். இனி ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாக அமெரிக்கா இருக்கும். வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். அதற்கு ஆகும் செலவுகளுக்கு ஈடாக அவ்வழியாக கொண்டு செல்லப்பட்டு சரக்குகளுக்கு 20 சதவிகிதம் கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்த நடைமுறை உடனடியாக துவங்கப்படும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடற்கொள்ளையர் நாடாக மாறும் அமெரிக்கா! லூலா கடும் சாடல்

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 - ஹோர்முஸ் விவகாரத்தில் டிரம்ப்பின் திட்டம், அமெரிக்காவை ஒரு கடற்கொள்ளையர் நாடாக மாற்றிவிடும் என்று பிரேசில் ஜனாதிபதி லூலா கடுமையாக விமர்சித்துள்ளார். “ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிடுவதாக டிரம்ப், டுவீட் செய்துள்ளார். ஆனால், அப்படி திறந்து விடப்படும் ஒவ்வொரு கப்பலிலும் உள்ள எண்ணெய்க்கு அதன் உரிமையாளர் டிரம்பிற்கு 20 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறு கிறார். கடந்த காலங்களில் இது போன்ற நடவடிக்கை ஒரு கடற்கொள்ளை யாகத்தான் கருதப்பட்டது. நீண்ட காலமாக கடற்கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா போன்ற ஒரு பெரிய நாடு, இப்போது தானே ஒரு கடற்கொள்ளையனாக மாற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.