ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்த டிரம்ப் எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடியில் சிக்கும் உலகப் பொருளாதாரம்
12 May 2026, 10:33 pm

ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்த டிரம்ப் எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடியில் சிக்கும் உலகப் பொருளாதாரம்

வாஷிங்டன், மே 12- ஈரான் சமர்ப்பித்த அமைதித் திட்டத்தை சில மணி நேரங்களிலேயே டிரம்ப் நிராகரித்துள்ளார்.

இதனால் மீண்டும் போர்ப் பதற்றம் அதி கரித்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துங்கியுள்ளது.

இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் தீவிர நெருக்கடிக்குள் செல்லும் என அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடுத்த போரினால், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது.

இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் உலக நாடுகளின் எண்ணெய்ச் சேமிப்பும் அந்நியச் செலாவணியும் விரைவாக கரைந்து பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிரம்ப் அமைதியை விரும்பாமல் ஈரானின் முன்மொழிவு எனக்குப் பிடிக்கவில்லை என அமைதித் திட்டத்தை நிராகரித்துள் ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு ஏற்பட்ட பாதிப்பு களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மையை அங்கீ கரிக்க வேண்டும்.

ஈரான் மீதான அமெரிக்காவின் அனைத்துப் பொரு ளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்.

அமெரிக்காவால் முடக்கப் பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஈரான் தனது அமைதி முன்மொழிவு திட்டத்தில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், “பேச்சுவார்த்தை என்பது சரணடைவ தல்ல; ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரால் எரிபொருள் மட்டுமல்லாது, உரங்களின் விநியோகமும் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதல் உணவு உற்பத்தி குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.