தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நான் மட்டும் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய்!”

2 Jun 2026, 8:31 pm
“நான் மட்டும் இல்லையென்றால்  நீ சிறையில் இருந்திருப்பாய்!”

“நான் மட்டும் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய்!”

நேதன்யாகுவை டிரம்ப் வசைபாடியதாக தகவல்

வாஷிங்டன் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்த திட்டமிட்டி ருந்த மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை, தான் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் லெபனான் மீது தீவிர தாக்கு தல்களை நடத்தி அந்நாட்டு நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது.

சமீபத்தில் அந் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பியூபோர்ட் கோட்டையை கைப்பற்றியது.

பிறகு அந்நாட்டு தலைநகர் பெய்ரூட்டை சுற்றி யுள்ள நகரங்களை தாக்கி அழித்து அப் பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் தான் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.

அதில் பெய்ரூட் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

அவர் (நேதன்யாகு) தனது ராணுவத்தை திருப்பி அனுப்பியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்காவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளை முடி வுக்குக் கொண்டு வரப்போவதாக ஈரான் எச்சரித்ததை அடுத்தே டிரம்ப் இந்தத் தொலை பேசி அழைப்பை மேற்கொண்டார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக அமெரிக்க ஊடக மான ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி வெளி யிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகை யில், டிரம்ப் நேதன்யாகுவிடம், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நான் மட்டும் இல்லையென்றால் நீ இந்நேரம் சிறையில் இருந்திருப்பாய்.

நான் உன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

உன்னுடைய இந்தச் செயலால் இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதனால் எல்லோரும் இஸ்ரேலையும் வெறுக்கிறார்கள் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய தாகத் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.