ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும்
10 Nov 2026, 9:15 pm

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும்

டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன், நவ. 10 -ஈரானுடனான போர் “விரைவில் முடி வுக்கு வரக்கூடும்”, அமெரிக்கா வுடன் ஈரான் அரசு “மிகவும் நாகரிகமாகப் பேசி வருகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய தாக்குதல்கள் “மிகவும் சாத்தியமற்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்த ஈரானுடனான மோதல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காண்கிறோம். இது விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டார்.

அதேநேரம், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்ட அவர்,

ஈரான் மீதான கடற்படை தடை தொடர்வதை யும், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களைத் தரைவழியாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட “ஆபரே ஷன் அயன் கேட்” என்ற சிறப்புப் படையையும் வளைகுடா நாடுகளான கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் சூழல் மாறினால் தாக்குதல் நடத்து வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் மற்றும் உலகநாடுகளின் மீதான வரிகள் காரணமாக அமெரிக்க மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

கடும் அதிருப்தியால் அவர்கள் இடைக் காலத் தேர்தலில் டிரம்ப் கட்சியை படுதோல்வியும் அடையச் செய்தனர்.

இதன் பின்னணியிலேயே, டிரம்ப் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.