தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அமைதியும்!

12 Jul 2026, 9:35 pm
டிரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியும்  அச்சுறுத்தலுக்குள்ளாகும் அமைதியும்!

டிரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அமைதியும்!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரானுடன் ஏற்பட்டி ருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக முறித்துக் கொண்டு மீண்டும் ஒரு போர்ப் பதற்றத்தை உலகளவில் உருவாக்கி யுள்ளது. அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தன்னிச் சையாகப் பிரகடனம் செய்துள்ளார். ஜூன் 17 அன்று இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத் தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளை அமெரிக்காவே தொடர்ந்து மீறி வந்த நிலை யில், தற்போது போர்நிறுத்தம் முடிந்துவிட்ட தாகக் கூறுவது டிரம்ப் நிர்வாகத்தின் அப்பட்ட மான எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுகிறது.

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்ற விவகாரமே இந்த மோதலின் மையப்புள்ளியாகும். ஓமன் கடற்கரை வழியாகச் சென்ற மார்ஷல் தீவுகள், சவூதி அரேபியா மற்றும் லைபீரியக் கொடி கொண்ட மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய எண்ணெய்ப் பொருட்கள் மீதான பொருளாதாரத் தடை களை அமெரிக்கா மீண்டும் விதித்தது. அதனைத் தொடர்ந்து ஈரான் எல்லையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 ஈரானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பதிலடி கொடுத்துள்ள ஈரானின் புரட்சிகரக் காவல் படை, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கா வின் ஐந்தாவது கடற்படைத் தளம் மற்றும் குவைத்தின் அலி அல்-சலேம் விமானத் தளம் ஆகியவற்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் களை நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவின் அதிநவீன எம்.க்யூ-9 (MQ-9) ரக உளவு ட்ரோன் ஒன்றையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குத் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று டொனால்டு டிரம்ப் மழுப்ப லாகக் கூறினாலும், ஈரானிய மக்கள் மீது ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஏற்றி, அவர்களைப் பணிய வைக்கலாம் என்ற அமெரிக்காவின் நயவஞ்சகச் சூழ்ச்சி இம்முறை யும் பலிக்கப் போவதில்லை. ஈரானின் நாடாளு மன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளது போல, அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் அரசியலின் காலம் முடிந்துவிட்டது. இந்த ஏகாதிபத்திய மோதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, இந்தியாவில் மும்பை பங்குச்சந்தையின் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது உட்பட பல விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உலகப் பொருளாதாரத்தையும் பிராந்திய அமைதி யையும் சீர்குலைக்கும் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான போர்வெறிப் போக்கினை உலக மக்களிடையே அம்பலப்படுத்துவோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.