தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரம்ப் சொன்னால் ‘தலையீடு’, சல்மா சொன்னால் ‘துரோகமா’?

11 Apr 2026, 5:30 am
டிரம்ப் சொன்னால் ‘தலையீடு’, சல்மா சொன்னால் ‘துரோகமா’?

டிரம்ப் சொன்னால் ‘தலையீடு’, சல்மா சொன்னால் ‘துரோகமா’?

உலக அரசியலில் ஒரு சின்ன அசைவு ஏற்பட்டால் போ தும், உடனே இங்குள்ள ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழக’ சங்கிகள் தங்கள் ‘விஸ்வகுரு’தான் அதற்குக் காரணம் என்று கிளம்பிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப்பே நேரடியாக “பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது” என்று சொல்லி சங்கிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டிய திமுக எம்.பி. சல்மாவை, அவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்காகவே குறி வைத்துத் தாக்கும் பாஜக-வின் அரசி யலைத் தான் இப்போது பார்க்கப்போகி றோம். பாகிஸ்தான் மத்தியஸ்தமும் டிரம்ப்பின் பாராட்டும் 2026 ஏப்ரல் மாதம், ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருந்த ‘மாபெரும்’ தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள் ளார். இதற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தம் செய்த தை டிரம்ப்பே தனது சமூக வலை தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். “யாரையாவது பார்த்து விஸ்வகுரு என்று சொல்ல மாட்டாங்களா?” என்று ஏங்கிக் கொண்டிருந்த சங்கிகளுக்கு, அந்தப் பெருமையைப் பாகிஸ்தான் தட்டிச் சென் றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மா கேட்டதில் என்ன தவறு? இதைத்தான் திமுக எம்.பி. சல்மா, “பாகிஸ்தான் தலையீட்டால் போர் நின்றுள்ளது... விஸ்வகுரு பாவம், இதைச் சங்கிகள் எப்படி ஜீரணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். உலக ஊடகங்கள் அனைத்தும் இதையே சொல்லிக்கொண்டிருக்கும்போது, சல்மா சொன்னதில் என்ன தேசத்துரோ கம் இருக்கிறது? ஆனால், பாஜக-வின ருக்கு ‘பாகிஸ்தான்’ என்ற பெயரை விட ‘சல்மா’ என்ற பெயர்தான் அதிக எரிச்ச லைத் தந்துவிட்டது போலிருக்கிறது. பெண் மற்றும் இஸ்லாமியர் என்பதால் வேட்டையாடலாமா? இதே கருத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்ட போது வாயைத் திறக்காத பாஜக-வினர், சல்மா சொன்னவுடன் “தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்” என்று குதிக்கிறார்கள். சல்மா ஒரு பெண் என்ப தாலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வர் என்பதாலும் அவரை ‘ரவுண்டு’ கட்டி அடிக்கப் பார்க்கிறார்கள். ஒரு கருத்தைச் சொல்லக்கூடச் சல்மாவிற்குத் தகுதி இல்லையா? அல்லது அவர் சொல்லும் உண்மை சங்கிகளின் ‘பொய் பிம்பத்தை’ உடைத்துவிட்டது என்கிற ஆத்திரமா? விஸ்வகுருவின் ‘கள்ள’ மௌனம்! உக்ரைன் போரை நிறுத்தியதாக உருட்டுவதில் காட்டிய வேகத்தை, ஏன் ஈரான் விவகாரத்தில் காட்ட முடிய வில்லை? டிரம்ப் நேரடியாகப் பாகிஸ் தானைப் புகழும்போது, இந்திய வெளி யுறவுத் துறை மௌனம் காப்பது ஏன்? சர்வதேச அளவில் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பாகிஸ் தானுக்குப் போவதைக் கண்டிப்பதற்குப் பதில், உண்மையைச் சொன்ன சல்மா வை ஏன் எதிர்க்க வேண்டும்? உண்மையைச் சொன்னால் உடனே “சிறுபான்மை வாக்கு வங்கி” என்று முத் திரை குத்துவது பாஜக-வின் பழைய பாணி. அமெரிக்க ஜனாதிபதியே ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தைச் சொன்ன தற்காகச் சல்மாவைத் தாக்குவது கடு மையாகக் கண்டிக்கத்தக்கது. சல்மா வை ஒரு இஸ்லாமியர் எனப் பிரித்துப் பார்க்கும் சங்கிகளின் கண்கள், டிரம்ப் சொன்ன உண்மையை மட்டும் ஏனோ பார்க்க மறுக்கின்றன. - அ. வி. கு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.