வர்த்தக ஒப்பந்தம் ‘வெற்றிகரமாக’ நிறைவேறியதாக அறிவித்தார் டிரம்ப்
3 Feb 2026, 4:00 pm
<p><strong>வர்த்தக ஒப்பந்தம் ‘வெற்றிகரமாக’ நிறைவேறியதாக அறிவித்தார் டிரம்ப்</strong></p>
<p>புதுதில்லி, பிப். 3 - இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும், இதன் காரணமாக, பரஸ்பர வரி விதிப்பை 25 சதவிகி தத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைப்பதாகவும், பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான தனது வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 2 (திங்க ளன்று), டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ எனும் சமூகவலைதளப் பக்கத்தில் இதற்கான அறி விப்பை வெளியிட்டார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்! அதில், “பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற் கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர். வர்த்தகம், ரஷ்யா - உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்” என்று தெரிவித்திருக்கும் டிரம்ப், “ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த நகர்வு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்” என்று கூறியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் பூஜ்ஜிய வரி! “பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் நான் கொண்டுள்ள மதிப்பு காரணமாக அவரது கோரிக்கையை ஏற்று வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடித்துள்ளோம். அந்த வகையில் பரஸ்பர வரி விதிப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான தனது வரி மற்றும் வரி இல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “500 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இதனால், இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் புகழ்பாடிய மோடி! பதிலுக்கு பிரதமர் மோடியும் சமூக வலை தளத்தில், “இன்று எனது அன்பு நண்பர் டிரம்ப்பின் அற்புதமான அறிவிப்புக்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் ஜனாதிபதி டிரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமைத் துவம், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது’’ என தெரிவித்துள்ளார். அஸ்வினி வைஷ்ணவின் மறைப்பும், மழுப்பலும்! எனினும், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரதமர் மோடி உறுதிப்படுத்தவில்லை. மாறாக, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது இரு நாட்டு மக்களுக்கும் தொழில்களுக்கும் பயனளிக்கும் ஒரு ஒப்பந்தம்’’ என்று மட்டுமே கூறியுள்ளார். ஒப்பந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. உண்மையைப் போட்டு உடைத்த அமெரிக்க அமைச்சர் ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில், இந்திய விவசாயத் துறையை, இந்திய விவசாயி களை, அமெரிக்காவிடம் பிரதமர் மோடி அடகு வைத்து விட்டார் என்பது மட்டும், அமெரிக்க வேளாண்மைத் துறைச் செயலாளர் புரூக் ரோலின்ஸ் வெளியிட்ட சமூக ஊடக பதிவின் மூலம் அம்பலமாகி இருக்கிறது. “அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒருமுறை அரும்பாடுபட்டுப் பலன்களைப் பெற்றுத் தந்த ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றிகள்! இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம், அமெரிக்க விவ சாயப் பொருட்களை இந்தியாவின் பிரம்மாண்ட மான சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் பொருட்களின் விலை உயர்வதோடு, அமெரிக்காவின் கிராமப்புறப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளா தார வளர்ச்சி ஏற்படும். அமெரிக்க விவசாயிகளுக்கு மாபெரும் வெற்றி கடந்த 2024-ஆம் ஆண்டில், இந்தியாவுட னான அமெரிக்காவின் வேளாண் வர்த்தகப் பற்றாக்குறை (Agricultural Trade Deficit) ரூ. 11,830 கோடி ($1.3 பில்லியன்) ஆக இருந்தது. இந்தியாவின் அதீத மக்கள் தொகை வளர்ச்சி, அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஒரு முக்கிய மான சந்தையாகத் திகழும் நிலையில், இன்றைய இந்த ஒப்பந்தம், நிலுவையில் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப் பெரிதும் உதவும். ஏற்கனவே விவசாயத் துறைக்காகச் செய்யப் பட்ட பல ஒப்பந்தங்களின் வரிசையில், இந்த புதிய ஒப்பந்தமும் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ஒரு ஒப்பந்தம் அமெரிக்க அமைச்சரின் இந்தக் கொண்டாட் டம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்திய விவசாயத்துறையை காவுகொடுத்துத் தான், பிரதமர் மோடி அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருக்கிறாரா, அதுபற்றிய விவரங்களை பிரதமர் மோடி ஏன் மறைக்கிறார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேச னும் இதையே கேட்டுள்ளார். “பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும், அப்போது பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங் களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அமெரிக்க ஜனா திபதி டிரம்ப் அறிவித்துள்ளார். என்னென்ன முடிவு களுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது. மோடி அரசு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஆனால், அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர், இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி, இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என் கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தை களை ஆக்கிரமிப்பதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி இந்தியாவை அமெரிக்காவிடம் சரணாகதி அடையச் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளன. செவ்வாயன்று மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கிளம்பினர். வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.</p>
