தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் அனுமதி கேட்பேன் - டிரம்ப்

13 May 2026, 9:15 pm
அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் அனுமதி கேட்பேன் - டிரம்ப்

அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் அனுமதி கேட்பேன் - டிரம்ப்

பெய்ஜிங்,மே 13- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசுமுறைப்பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்த பயணத்தில் சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க வணிகம் மற்றும் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய ஒன்றாகவே அமைந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் டிரம்ப்புடன் சீனா சென்றுள்ளனர்.

இந்த பயணத்தின் போது ஜி ஜின்பிங்கிடம் அந்நாட்டை அமெரிக்க நிறுவனங்களுக்காக திறந்து விட கோரிக்கை வைப்பேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) சிஇஓ ஜென்சன் ஹுவாங், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் உள்ளிட்ட சில தொழிலதிபர்கள் டிரம்ப்பின் விமானத்திலேயே அவருடன் பயணித்து சீனா சென்றுள்ளனர்.

மேலும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்காவின் திறமையான சிஇஓ-க்கள் சீனாவில் தங்களது பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, சீனப் பொருளாதாரத்தை “திறந்துவிடுமாறு” (Open up) சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் தைவான் விவகாரம் போன்ற அரசியல் உரசல்களுக்கு மத்தியிலேயே இந்தப் பயணம் நடைபெறுகிறது.

மார்ச் மாதம் நடைபெற வேண்டிய இந்தப் பயணம் போர்க் காரணங்களால் தள்ளிப்போனது.

ஈரானிடமிருந்து சீனா அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலையில், இது குறித்து ஜி ஜின்பிங்குடன் விரிவாக விவாதிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், கருத்து வேறுபாடுகளைக் களையவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

மேலும், அரிய வகை கனிமங்கள் (rare earth) ஏற்றுமதி கட்டுப்பாடுகள், செயற்கை நுண்ணறிவு (AI) போட்டி மற்றும் கடந்த அக்டோபரில் எட்டப்பட்ட வரி விதிப்பு, போர் நிறுத்த உடன்படிக்கையை நீட்டிப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதற்குச் சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.