தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தடைகளைத் தவிடு பொடியாக்கிய சீனா; சந்தை லாபத்திற்காக வந்து சேர்ந்த முதலாளிகள்!

14 May 2026, 9:00 pm
தடைகளைத் தவிடு பொடியாக்கிய சீனா;  சந்தை லாபத்திற்காக வந்து சேர்ந்த முதலாளிகள்!

தடைகளைத் தவிடு பொடியாக்கிய சீனா; சந்தை லாபத்திற்காக வந்து சேர்ந்த முதலாளிகள்!

பெய்ஜிங், மே14- சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலா ளிகளாகவும், செயற்கை நுண்ணறிவுத்துறை யில் பெரும் முதலீடு செய்துள்ள நிறுவனங்க ளாகவும் உள்ள ஆப்பிள், டெஸ்லா, பிளாக்ராக், போயிங், என்விடியா உள்ளிட்ட பதினெட்டு அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்கள் டிரம்ப்பின் இந்த சீன பய ணத்தில் பங்கேற்றுள்ளனர்.

டிரம்ப் இரண்டாம் முறையாக ஜனாதி பதியாக பதவி ஏற்ற பிறகு சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது வர்த்தகப்போரை துவங்கினார். அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்கே வரவேண்டும். இங்கேயே முதலீடு செய்ய வேண்டும் என்றார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பொருளாதார வளர்ச்சிக்கான போட்டியில் சீனாவை முன்னேறவிடக்கூடாது என கங்க ணம் கட்டிக்கொண்டு பல்வேறு தடைகளை யும் வரிகளையும் அந்நாட்டின் மீது விதித்தார். ஆனால் இன்று தன்னுடைய விமானத்திலேயே தன் நாட்டு முதலாளிகளை சீனாவிற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க முதலாளிகளின் விருப்பம்

சீனா மீது அதிகமாக 145 சதவிகிதம் வரை டிரம்ப் வரி விதித்தார். அப்போதும் கூட அந்நாட்டுடன் எந்த வகையில் எல்லாம் பொருளாதார உறவுகளை மேற்கொள்ள முடியுமோ அவற்றை மேற்கொள்வோம் என என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்தார். குறிப்பாக சீனா மீது அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமாக இருந்த போதே இரு முறை அவர் சீனாவிற்கு வர்த்தக ரீதியாகச் சென்றார். அதன் பிறகு ஆப்பிள் சிஇஓ டிம் குக் போன்ற பல அமெரிக்க முதலாளிகள் சீனா உடனான வர்த்தக உறவு தொடர வேண்டும் என்பதில் உறுதிகாட்டத் துவங்கினர்.

இருதரப்பும் ஒத்துழைக்க முடிவு

தன்னுடன் வந்த முதலாளிகளை ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜின் பிங்குடன் பேசிய முதலாளிகள் தாங்கள் “சீனச் சந்தைக்குப் பெரும் மதிப்பளிப்பதாகவும்”, அந்நாட்டில் மேலும் அதிக வணிகம் மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த சீன ஜனாதிபதி, “ இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஒத்துழைப்புகளை” வரவேற்பதாகக் கூறியதுடன், அமெரிக்க நிறுவனங்களுக்குச் “சீனாவில் பரந்த வாய்ப்பு கள் கிடைக்கும்” என்றும் உறுதியளித்தார்.

2017 இல் டிரம்ப் சீனாவிற்கு வந்தபோது, அமெரிக்கா திணித்த வர்த்தகப் போரை எதிர்த்து நிற்கும் நிலையில் இருந்தது. இன்று அந்த நிலைமை தடைகளை தாண்டிய வளர்ச்சி என்ற கட்டத்திற்கு நகர்ந்து விட்டது. அதாவது தன் மீது அமெரிக்கா தடைகளை விதித்தால் அதனை சவாலாக எடுத்துக் கொண்டு முன்னைவிட மேலும் சில படிகள் வளர்ச்சியை சீனா அடையத்துவங்கியுள்ளது.

குறிப்பாக தனது உற்பத்தி மற்றும் ஏற்று மதிச் சந்தைகளை விரிவுபடுத்தி, தொழில் நுட்பத் தற்சார்பை உருவாக்கி, பொருளா தார ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வலிமை யைப் பெற்றுள்ளது. டிரம்ப்பின் வர்த்தகப் போர் சீனாவை விட அமெரிக்கப் பொரு ளாதாரத்தையே அதிகம் பாதித்து வருகிறது. இதனாலேயே அமெரிக்கத் தொழிலதிபர்கள் சீனச் சந்தையைத் தங்களால் தவிர்க்க முடியாது என டிரம்ப்புடன் சீனா வந்துள்ளனர் என வென்ஹுவா ஸோங்ஹெங் சமகாலச் சீனச் சிந்தனைக்கான இதழில் எழுதி வரும் டிங்ஸ் சாக் குறிப்பிடுகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.