தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு

23 Mar 2026, 1:25 pm
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு
<p>ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 5 நாட்களுக்கு ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி &nbsp;உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.<br /> மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல அனுமதி மறுத்துள்ளது. இதை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் ஈரான் விதித்த் ஹோர்முஸ் நீரிணை தடையை நீக்க வேண்டும், இல்லை என்றால், ஈரானின் மின் கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் மிரட்டஸ் விடுத்துள்ளார். இதனிடையே நேற்று அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனை அடுத்து, ஈரானின் மின் கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், இஸ்ரேலின் மின் நிலையங்கள், வளைகுடா பிராந்தியம் முழுவதும் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.<br /> இந்த நிலையில், ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 5 நாட்களுக்கு ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி &nbsp;உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்கா தங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.