டிரம்ப்பும், அதானியும் ‘ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வேட்டைக்காரர்கள்’ எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டு குற்றச்சாட்டு
3 Nov 2026, 11:20 pm

டிரம்ப்பும், அதானியும் ‘ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வேட்டைக்காரர்கள்’ எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டு குற்றச்சாட்டு

புதுதில்லிபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸை மையமாகக் கொண்டு ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு(ஆர்எஸ்எப் - Reporters Without Borders)’ செயல்பட்டு வருகிறது. உலகின் முக்கிய பத்திரிகையாளர் அமைப்புகளில்இதுவும் ஒன்றாகும். ஆர்எஸ்எப் வெளியிடும் வருடாந்திர உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் உள்ள180 நாடுகளில் இந்தியா 157ஆவதுஇடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு2026ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் இலக்கு வைத்த 33 “ஊடக சுதந்திர வேட்டைக்காரர்களின்” (Press Freedom Predators) சுயவிவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரானஅதானி மற்றும் இந்தியாவின் தீவிர வலதுசாரி இணையதளமான ‘ஆப் இந்தியா’ (opindia.com) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நவம்பர் 2 அன்று வெளியானஇந்த ஊடக சுதந்திர வேட்டைக்காரர்களின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,ஆர்எஸ்எப்-இன் வருடாந்திர ‘உலக ஊடக சுதந்திரக் குறியீட்டிற்கு’ இணையாக இந்த ‘ஊடக சுதந்திர வேட்டைக்காரர்கள் பட்டியல்’ கருதப்படுகிறது. அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூகம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இந்த ஊடக சுதந்திர வேட்டைக்காரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிரம்ப்கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஊடகங்கள் மீது நடத்திய கடுமையான தாக்குதல்களின் விளைவாக இந்த ஆண்டு ஊடக சுதந்திர வேட்டைக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் டேனியல் ஓர்டேகா (நிகரகுவா), அஜர்பைஜானின் இல்ஹாம்அலியேவ் மற்றும் இஸ்ரேலிய ஆயுதப்படைகளும் உள்ளன.அதானிஅதேபோல, பத்திரிகையாளர்களை நீதிமன்ற வழக்குகள் மூலம் துன்புறுத்துவோரைக் குறிக்கும் ‘சட்டப் பிரிவின்’ கீழ்அதானி குழுமமும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதானி குழுமம் மற்றும் அதன்துணை நிறுவனங்கள், 2017 முதல் 15-க்கும் மேற்பட்ட விமர்சனப்பூர்வமான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 10 சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

ஆப் இந்தியாசுதந்திரமான பத்திரிகைத் துறையின் மீது தொடர் தாக்குதல்களை நடத்துவதில் பெயர் பெற்ற ‘ஆப் இந்தியா’, 2014-இல் தொடங்கப்பட்ட ஒரு இணையதளமாகும். இது இந்துத்துவா அதிதீவிர சித்தாந்தத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமும் ஊடக சுதந்திர வேட்டைக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” என ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.