முந்தய பக்கம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் டிஆர்இயு வலியுறுத்தல்

26 Mar 2026, 2:46 pm
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்   டிஆர்இயு வலியுறுத்தல்
<p><strong>பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் &nbsp; டிஆர்இயு வலியுறுத்தல்</strong></p> <p>செங்கல்பட்டு, மார்ச் 26- பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டுமென டிஆர்இயூ பொது மகா சபை வலியுறுத்துள்ளது. டிஆர்இயூ செங்கல்பட்டு திண்டிவனம் காஞ்சிபுரம் கிளைகளின் பொது மகாசபை செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தலை மையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஜோதி துவக்கி வைத்தார் பொறுப்பாளர் வி.டேனியல் விளக்க உரையாற்றினார். பொதுச் செய லாளர் பேபி சகிலா, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.பகத்சிங்தாஸ், டிவிசன் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். &nbsp;நிர்வாகிகள் தேர்வு &nbsp;தலைவராக கே.ராஜா,செயலாளராக ஆர்.செல்வகுமார்,பொருளாளராக எ.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram