நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரி
22 Jan 2026, 2:57 pm
<p><strong>நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரி</strong></p>
<p>நாகர்கோவில். ஜன, 22- நாகர்கோவிலில் அதிகாலையில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியா குமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் முன்பு அதி காலை இரண்டு மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனை பார்த்த ரோட்டில் சென்ற வாகனங் கள் நிறுத்தப்பட்டன. பின்னர் சில வாகனங்களின் ஓட்டுநர் கள் சேர்ந்து அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பலனின்றி அந்த லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.</p>
