கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
5 Feb 2026, 3:40 pm

கிராவல் மண் கடத்திய லாரி சிறைபிடிப்பு

சேலம், பிப். 5- சேலம் மாவட்டம் குப்பனூர் ஊராட்சிப் பகுதியில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிறைபிடித்து அதிகாரிக ளிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சட்ட விரோத கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், வியாழனன்று குப்பனூர் ஊராட்சிப் பகுதியில் அனுமதியின்றி அதிக அளவில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாகப் பொதுமக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை வழிம றித்து சிறைபிடித்தனர். லாரியில் இருந்த அனுமதிச் சீட்டை (Pass) ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா பகுதி யில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அங்கிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள குப்பனூர் பகுதியில் சட்டவிரோத மாக மண் அள்ளியது சோதனையில் தெரியவந்தது. இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நீண்ட நேரம் கழித்தே கிராம நிர்வாக அலு வலர் சம்பவ இடத்திற்கு வந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பின்னர், சிறைபிடிக்கப்பட்ட லாரி அவரிடம் ஒப் படைக்கப்பட்டது. கும்பகோணத்தைச் சேர்ந்த ராசப்பா என்பவர் ‘ஆதி பராசக்தி’ என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழகம் முழுவதும் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாகவும், அதனை மாவட்ட வாரியாக ‘சப்-காண்ட்ராக்ட்’ விட்டுப் பணம் வசூலிப்பதாக வும் கூறப்படுகிறது. ஒரு சில அனுமதிச் சீட்டுகளை வைத்துக் கொண்டு, மாவட்டம் முழுவதும் பெருமளவில் கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இத்தகைய கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் குடிநீர் விநியோகம் சீரடைவது எப்போது?

திருப்பூர், பிப்.5 - திருப்பூர் மாநகரத்தில் குடிநீர் விநி யோகத்தில் சீரான நிலை ஏற்படுவது எப்போது என்று பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். திருப்பூர் என்றாலே குடிநீர் தட்டுப் பாடு என்ற நிலை கடந்த 25 ஆண்டுக ளுக்கு முன்பு இருந்தது. அப்போது எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிடுவது ஒவ்வொரு நாளும் காணக் கூடிய காட்சியாக இருக்கும். பனியன் தொழில் வேகமான வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை பெருகிய போது, முதலாவது குடிநீர் திட் டம் போதாது என்று எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது குடிநீர் திட்டத் திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தத் திட்டம் ஆமை வேகத்தில் கட்டமைக் கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது. எனினும் மக்கள் தொகை மென்மேலும் அதிகரித் ததால், இரண்டாவது குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் பிரச் சனை தீரவில்லை. இதையடுத்து 1996 - 2001 திமுக கலைஞர் ஆட்சி காலத் தில் மூன்றாவது திட்டத்திற்கு வடிவ மைப்பு தயாரிக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2002ல் அடிக்கல் நாட் டப்பட்டு, 2005 இல் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை. 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அப் போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நான்காவது குடிநீர் திட் டம் வரும் என அறிவித்தார். அதன்படி நான்காவது குடிநீர் திட்ட மும் மேட்டுப்பாளையம் பவானி ஆற் றில் இருந்து திருப்பூருக்கு வடிவ மைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண் டுவரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து திட்டங்கள் போட்டா லும், நகர விரிவாக்கத்திற்கு ஏற்ற குடிநீர் பகிர்மான விநியோக கட்டமைப்பு சரி யாக இல்லாததால், பல பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை. தற்போது திருப்பூரில் மொத்தம் 15 கோடியே 50 லட்சம் லிட்டர் (155 எம். எல்.டி) குடிநீர் விநியோகம் செய்யப்ப டுகிறது. எனினும் சில பகுதிகளில் மட் டுமே இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் குடிநீர் கிடைக் கிறது. பல பகுதிகளில் 8 முதல் 10 நாட்க ளுக்கு ஒரு முறை என்ற அளவில் தான் குடிநீர் வருகிறது. மாமன்ற கூட்டத்தில் இது குறித்து பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதுவும் கோடை காலம் வர உள்ள நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்களும் இப்பிரச்சனைக்கு தீர்வு எதிர்பார்க்கின் றனர். குடிநீர் பகிர்மான, விநியோக கட்ட மைப்பு கடந்த காலத்தை விட பெரும ளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்து டன் மார்ச் மாதத்திற்குள்ளாக 19 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். எனவே குடி நீர் பிரச்சனை தீரும் என்று மேயர் தினேஷ்குமார் மாமன்றத்தில் தெரி வித்தார். பவானி, காவிரி ஆறுகளில் இருந்து திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வரு வதில் தொடங்கி, வீடுகளுக்கு விநியோ கிப்பது வரை எல்லா நிலைகளிலும் முழு மையாக ஆய்வு செய்து, பிரச்சனை களை களைந்து குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது பொதுமக்க ளின் எதிர்பார்ப்பாகும். இதில் மாநக ராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தீர்வு காண வேண்டும் என மக்கள் கூறு கின்றனர்.

கால்பந்து போட்டி: 17 அணிகள் பங்கேற்பு

உதகை, பிப்.5– நீலகிரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், 17 அணிகள் பங்கேற்றன. நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘யூத் லீக்’ சாம்பியன்ஷிப் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப் படுகிறது. நடப்பாண்டு போட்டி, 13, 15 வயதுகளுக்கான கால்பந்து போட்டி எச்ஏடிபி மைதானத்தில் வியாழனன்று துவங்கியது. போட்டியில், 13 வயதுக்குட்பட்ட போட்டியில் 10 அணிகளும், 15 வயதுக்குட்பட்ட போட்டி யில் 7 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டி யானது பிப்ரவரி மாதம் இறுதி வரை நடக் கிறது. துவக்கப்போட்டியல், ஜே.எஸ்.எஸ்., பள்ளி மற்றும் ஹோலி கான்வர்ட் பள்ளியும் விளையாடின. இப்போட்டியை நீலகிரி கால் பந்து சங்க செயலாளர் மோகன முரளி துவக்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகி ஓம் பிர காஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

நாமக்கல், பிப்.5- பொத்தனூர் பேரூராட்சியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, டவர் அமைக்க இடம் வழங்கிய இடத்தின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ராஜேந்தி ரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் நிறுவ னத்தின் செல்போன் டவர் அமைப்பதற்கான வேலை நடை பெற்று வருகிறது. இந்த இடத்திற்கு அருகில் குடியிருப்பு கள் அதிகளவில் உள்ள நிலையில், அப்பகுதி பொதுமக் கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதனன்று ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் கூறும் போது, எங்கள் வீட்டின் அருகாமையிலே செல்போன் டவர் அமைத்தால் செல்போன் டவரில் இருந்து வரும் கதிர் அலைகளால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். செல்போன் டவரில் தீ விபத்து ஏற்பட்டால் எங்கள் வீடுகளில் பாதிப்பு ஏற்படும், ஜெனரேட்டர் மூலம் செல்போன் டவர் இயக்கும் பொழுது அதிலிருந்து பாதிப்பு ஏற்படும், பெரும் காற்று காலத்தில் செல்போன் டவர் சாய்ந் தால் எங்கள் வீடுகள் முற்றிலும் சேதமடையும், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முரு கன், பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் உமாசங்கர், பொத்த னூர் பேரூராட்சி கவுன்சிலர் எம்.டி.வைரமணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் தற்காலிகமாக இந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று தெரி வித்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஈரோடு, பிப்.5- கர்நாடகா மாநிலத்தினரை தாக்கி, சமூக வலைதளங்க ளில் பதிவிட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம், மாமரத்துப்பாளையம், சக்திதேவி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (36). இதேபோன்று, பி.பெ. அக்ரஹாரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (19). இவர்கள் இருவரும் ஈரோட்டிற்குள் கர்நாடகா மாநிலத்தினரை தாக்குவதும், அவர்களை அச்சுறுத்தி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இரு மாநிலத்தினரி டையே பகைமையை உண்டாக்கும் விதமான கருத்துகளை பேசி விடியோ பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் துறையினர், இருவரையும் கைது செய்து, நீதி மன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, அச்சுறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலம்பரசன் மற்றும் அப்துல் மாலிக் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட ஆட் சியருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து ஆட்சியர் ச.கந்த சாமி, இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

யானை தாக்கி உயிரிழப்பு; நிதியுதவி

மே.பாளையம், பிப்.5- பரளிக்காடு மலைக்கிரா மத்தில் யானை தாக்கி உயிரி ழந்தவரின் குடும்பத்தின ருக்கு நிதியுதவி வழங்கப் பட்டது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் அடுத்துள்ள மலைக்கிராமங்களில் வசிக் கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப் பட்டு வரும் நலத்திட்டங் கள் முறையாக சென்றடைந் துள்ளதா? என பயனாளிகளி டம் தமிழக முதல்வரின் “தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” என்கிற நிகழ்வின் கீழ் திமுக நிர்வா கிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக-கேரள எல்லை யோரத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான பரளிக் காடு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஒன்றி யச் செயலாளர் சுரேந்திரன், கூடலூர் நகராட்சித் தலை வர் அறிவரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு திட்டங்கள் குறித்து கேட்ட றிந்தனர். மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன் பரளிக் காடு கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த பழங்குடி யினத்தை சேர்ந்த சிவகுமா ரின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியு தவி வழங்கப்பட்டது.

நாளை மின்தடை

ஈரோடு, பிப்.5- சென்னிமலை மற்றும் சிப்காட் உள்ளிட்ட பகுதிக ளில் சனியன்று (நாளை) மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிப் காட் துணை மின் நிலையம் – 2 மற்றும் சென்னிமலை ஆகிய துணை மின் நிலை யங்களில் சனியன்று மாதாந் திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இத னால் சிப்காட் வளாகம் தெற்குப் பகுதி, கம்புளியம் பட்டி, சரளை, வரப்பாளை யம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் மற்றும் சென்னிமலை நகர் பகுதி, பூங்கா நகர், ஊத்துக் குளி சாலை, ஈங்கூர் சாலை, குமராபுரி, சக்தி நகர், பெரி யார் நகர், நாமக்கல் பாளை யம், அரச்சலூர் சாலை, குப் பிச்சிபாளையம், திப்பம்பா ளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளை யம், ராமலிங்கபுரம், ஒரத் துப்பாளையம், அய்யம்பா ளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொ ழுவு உள்ளிட்ட சனியன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உடுமலை, பிப்.5- வனத்துறை சார்பில், விவசாயிகளின் குறைதீர் கூட்டம் சனியன்று (நாளை) நடைபெறவுள்ளது. இதுகுறித்து வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் சனி யன்று (நாளை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற வுள்ளது. இக்கூட்டத்தில், உடுமலைப்பேட்டை மற்றும் அமரா வதி வனச்சரகத்திற்குட்பட்ட வனஎல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வன உயிரினங்களால் விளைநிலங்களில் ஏற்ப டும் சேதாரம், மனித - வனவிலங்கு தாக்குதல், அதற்கான நிவா ரணம் வழங்குதல் மற்றும் வன உயிரினங்களால் ஏற்படும் இடையூறுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாலோசிக்கலாம். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெள்ளகோவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மாதர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.5 - வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் பெண்கள் கலந்து கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாதர் சங்க திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஜானகி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் புதிதாக மாதர் சங்கக் கிளை ஏற்படுத்தப்பட்டது. மாதர் சங்க சிவநாதபுரம் கிளைத் தலைவராக பாப்பாத்தி, கிளைச் செயலாளராக சாந்தி, கிளைப் பொருளாளராக லட்சுமி, துணைத் தலைவ ராக சகுந்தலா, துணை செயலாளராக ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு மனு கொடுத்த அனைவருக் கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொகுதி –I தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பூர், பிப்.5- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்ட நிரல் கடந்த டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தொகுதி -I தேர்வுக்கான அறிவிப்பு 2026 ஜூன் 23 அன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தொகுதி –I தேர்வுக் கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு அறை எண்.439 இல் தொடங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இரு முறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக் கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

வங்க தேசத்தவருக்கு இரண்டாண்டு சிறை

திருப்பூர், பிப். 5 - திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்தவருக்கு நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர, நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணியகாரம்பாளையம், காஞ்சிநகர் பகுதியில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதாக போலீசாருக்கு கடந்தாண்டு ஜன.28 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லூர் காவல் நிலைய போலீசார் சோதனை செய்தபோது அங்கே முகமது லிடன் மியா (43) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் எவ்வித ஆவணங்களும் இன்றி வங்கதேசத்தில் இருந்து திருப்பூருக்கு வந்து தங்கி இருப்பதும், இங்கு வேலை செய்ததும் தெரிந்தது. எனவே, அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிந்தது. இந்நிலையில் புதனன்று திருப்பூர் மாவட்டம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். முகமது லிடன் மியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை அரசு வழக்குரைஞர் பூமதி நடத்தினார்.

இன்று மின்தடை

உடுமலை, பிப்.5- உடுமலை, பாலப்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளியன்று (இன்று) பரா மரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளது. இதனால் உடு மலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேருவீதி, காவ லர் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம் பட்டி, குரல்குட்டை, மடத் தூர், மருள்பட்டி, உரல் பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

மா சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கான வழிகாட்டுதல்கள்!

உடுமலை, பிப்.5 – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாகு படி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் சுமார் 40 சதவீதம் வரை பூக்கள் பூக்கத் தொடங்கி யுள்ளன. இந்தப் பூக்கள் உதிராமல் காய்க ளாக மாறி, அதிக மகசூல் தருவதை உறுதி செய்ய விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் குறித்து வேளாண் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதன்படி, மா மரங்களில் பூக்கள் எடுக் கும் தருணத்தில் நீர்ப்பாசனம் மிக முக்கிய மானது. மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து ‘காய்ச்சலும் பாய்ச்சலுமாக’ நீர் விட வேண்டும். அதிகப்படியான நீர் பாய்ச்சினால், மரங்கள் புதிய இலைகளை (துளிர்) உரு வாக்க தொடங்கும், இதனால் பூக்கும் திறன் குறையும். அதேசமயம் அளவுக்கு அதிக மான நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படும். நீண்ட இடைவெ ளிக்கு பிறகு திடீரென அதிக நீர் பாய்ச்சுவது பூக்கள் உதிர வழிவகுக்கும். பெரும்பாலான மரங்களில் பிஞ்சுகள் பிடிக்கத் தொடங்கும் வேளையில் நீர் பாய்ச்சுவது பலன் தரும். மேலும், பூக்கும் தருணத்தில் யூரியா போன்ற தழைச்சத்து உரங்களைத் தவிர்க்க வேண்டும். இது பூக்கள் உருவாவதை 40% வரை குறைத்துவிடும். பூக்களின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தவும், காய் உதிர்வதைத் தடுக்கவும் கால்சியம் மற்றும் போரான் சத்து களை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். இது மகரந்த சேர்க்கையை உறுதிப்படுத்தி பிஞ்சுகள் பிடிக்க உதவும். இயற்கையாகவே மா மரங்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கிகள் போதுமானதாக இல்லாதபோது, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி NAA, போரான் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். மேலும், கடல்பாசி உரம் அல்லது ஹியூமிக் அமிலம் (Humic Acid) போன்றவற்றையும் பயன்ப டுத்தலாம். பூக்கும் தருணத்தில் கடுமையான ரசாயன மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். வயலில் உள்ள களைகளை அழிக்க ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம். தற்போது நிலவும் வானிலை யில் தத்துப்பூச்சி தாக்குதல் அதிகம் காணப் படலாம். இவற்றால் பாதிக்கப்பட்ட பூங் கொத்துகளை உடனடியாக அகற்றி அழித்துவிட வேண்டும். தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக்கொல்லி களை பயன்படுத்தலாம். பூங்கொத்து உருக்குலைவு நோய் தென்பட்டால், பாதிக் கப்பட்ட பகுதியை அகற்றிவிட்டு சூடோ மோனஸ் தெளிக்க வேண்டும்.