தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் வன்முறை, மிரட்டல்களுக்கு இடையே இடது முன்னணி தீவிரப் பிரச்சாரம்

yesterday
திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் வன்முறை, மிரட்டல்களுக்கு இடையே இடது முன்னணி தீவிரப் பிரச்சாரம்

திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் வன்முறை, மிரட்டல்களுக்கு இடையே இடது முன்னணி தீவிரப் பிரச்சாரம்

அகர்தலாபாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா மாநகராட்சி உட்பட 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவ. 27அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தற் போது தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஆளும் பாஜகவினரின் மிரட்டல் கள், தாக்குதல்கள் மற்றும் பல் வேறு தடைகளைத் தாண்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. செங்கொடிகளுடன் எளிமையான ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ மூலம் இடது முன்னணித் தலைவர்கள், ஊழியர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரச்சாரம் செய்யும் இடங்களில் பாஜக குண்டர்கள்,”இங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது” என மிரட்டல் விடுகின்றனர். சில இடங்களில் பாஜகவினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங் குப் பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், இடது முன்னணித் தலைவர்கள், ஊழியர்கள் இந்த வன்முறை, மிரட்டல்களுக்கு அஞ்சாமலும், பாஜகவிற்குத் தக்க பதிலடி கொடுத்தும்செங்கொடிப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஜிதேந்திர சவுத்ரி கண்டனம்இதுதொடர்பாகத் திரிபுரா எதிர்க்கட்சித் தலைவரும், சிபிஎம்மாநிலச் செயலாளருமான ஜிதேந் திர சவுத்ரி செய்தியாளர்களிடம்கூறுகையில்,”திரிபுராவின் கமல், வேட்பாளர்களை மனுக்களைத் திரும்பப் பெற வைக்கவும் கூலிப்படைகளை ஏவி பாஜக அதிகார பலத்தைப் பயன்படுத்தியது.வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய அக். 31ஆம் தேதி முதல், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான நவ.10ஆம் தேதி வரை மிரட்டல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற் றன. எதிர்க்கட்சி வேட்பாளர் களைத் திட்டமிட்டுத் தடுப்பதும், கட்டாயப்படுத்தி வேட்புமனுக் களைத் திரும்பப் பெற வைப்பதும், அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக வன் முறையையே பெரிதும் நம்பியிருப் பதை வன்முறை மற்றும் மிரட்டல் சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இத்தகைய தாக்குதல்கள், திரிபுராவின் ஜனநாயக அமைப்பிற்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.