திரிபுரா பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தல் : இடது முன்னணி வாக்கு சதவீதம் அதிகரிப்பு!
7 Oct 2026, 11:33 pm

திரிபுரா பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தல் : இடது முன்னணி வாக்கு சதவீதம் அதிகரிப்பு!

அகர்தலா, அக். 7 -திரிபுராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் வேட்புமனு தாக்கல்செய்யவிடாமல் தடுத்த அடக்குமுறைகளையும் மீறி, பழங்குடியின தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் (TTAADC)தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி தனது வாக்கு வங்கியைகணிசமாக உயர்த்தியுள்ளது.

28 பழங்குடி மாவட்டக் கவுன்சில் இடங்களைக் கொண்ட கிராமக் கமிட்டித் தேர்தல் முடிவுகள், ஆளும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி சரிவடைந்து வருவதையும், பழங்குடியினப் பகுதிகளில் இடதுசாரிகளின் செல்வாக்கு வேகமாக மீண்டெழுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.

வாக்கு வங்கியில் கணிசமான உயர்வு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தலில் சிபிஐ(எம்) 9 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர்மாதம் நடைபெற்ற இந்தக் கிராமக் கமிட்டித்தேர்தலில் கட்சியின் வாக்கு வங்கி 12.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 4 சதவீதப் புள்ளிகள்அதிகரிப்பாகும். இடதுசாரி ஆதரவு பெற்ற சுயேச்சைகள் பெற்ற வாக்குகளையும் கணக்கில் கொண்டால், இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகமாகும்.சுமார் 1,643 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் ஆளும்கட்சியினரால் தடுக்கப்பட்ட நிலையிலும், இடதுசாரிகளின்வாக்கு வங்கி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரிவைச் சந்தித்த திப்ரா மோதா

மறுபுறம், ஆளும் கூட்டணியில் உள்ள திப்ரா மோதா கட்சியின் வாக்கு வங்கி கடுமை

யான சரிவைச் சந்தித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 57.62 சதவீதமாக இருந்த அக்கட்சியின் வாக்குசதவீதம், தற்போது 46.76 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 11 சதவீதப் புள்ளிகள் சரிவாகும்.திப்ரா மோதா உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும், பாஜகவின் வாக்கு சதவீதம் எந்த முன்னேற்றமும் இன்றி 28சதவீதத்திலேயே முடங்கியுள்ளது.

5 கிராமக் கமிட்டிகளில்இடதுசாரிகள் வெற்றி

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சிபிஐ(எம்) 2 கிராமக் கமிட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்தும்அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி, இடதுசாரிகள் 3 கிராமக் கமிட்டிகளில் நேரடிப்பெரும்பான்மை பெற்றுள்ளனர். இவற்றுடன், சிபிஐ(எம்) ஆதரவு பெற்ற சுயேச்சைகள் பெரும்பான்மை பெற்றஇடங்களையும் சேர்த்து, மொத்தம் 5 கிராமக் கமிட்டிகளை இடது முன்னணி கைப்பற்றி யுள்ளது தெரியவந்துள்ளது.மொத்தமுள்ள 4,594 வார்டுகளில் திப்ரா மோதா 3,428 இடங்களிலும், பாஜக 859 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ(எம்) நேரடியாக 87 இடங்களிலும், ஆதரவு பெற்ற சுயேச்சைகளுடன் சேர்த்து 97 இடங்களிலும் வென் றுள்ளது.

உண்மையான மக்கள் தீர்ப்பல்ல: ஜிதேந்திர சவுத்ரி கண்டனம்

அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிபிஐ(எம்) திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்தார்.“வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும்கட்சியினர் நிகழ்த்திய வன்முறைகள் மற்றும் முறைகேடுகளுக்கு மத்தியில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன. இருப்பினும், கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தலைவிட இடது முன்னணி அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. வன்முறையின்றி நேர்மையாகத் தேர்தல் நடைபெற்றிருந்தால், இடதுசாரிகளின் வெற்றி இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.அடக்குமுறைகள் மற்றும் திட்டமிட்ட சதிவேலைகள் மூலம் திரிபுராவின் பழங்குடி யின அரசியலிலிருந்துஇடதுசாரிகளை அகற்றிவிட முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.