பாஜகவிற்கு பலத்த அடி! திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தல்
6 Oct 2026, 9:35 pm

பாஜகவிற்கு பலத்த அடி! திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தல்

அகர்தலாவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பழங்குடிப் பகுதி மாவட்டக் கவுன்சில் என்றதன்னாட்சி அதிகார அமைப்பு உள்ளது. இது இந்திய அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையின் கீழ் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு போன்ற ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.இந்நிலையில், 28 இடங்களைக் கொண்ட இந்தப் திரிபுரா பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கியது. திரிபுராவில் பாஜககூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், பாஜக மற்றும் திப்ரா மோதாஉள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலில் தனித்துக் களமிறங்கின. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி (சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்), பார்வர்டுபிளாக், ஆர்எஸ்பி), காங்கிரஸ் கூட்டணி (காங்கிரஸ், திரிபுரா மக்கள் கட்சி), திரிபுரா சுதேசி உள்ளிட்ட கட்சிகளும்தேர்தல் களத்தில் இருந்தன.

திங்கள்கிழமை நள்ளிரவில் நிறைவுபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், திப்ரா மோதா கட்சி3,428 வார்டுகளில் வெற்றி பெற்று24 இடங்களைக் கைப்பற்றியது. அதேசமயம், 859 வார்டுகளில் வெற்றிபெற்ற பாஜக 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மாவட்டக் கவுன்சிலின் மொத்தமுள்ள 28 இடங்களின் ஆட்சிப் பொறுப்புகளைத் திப்ரா மோதா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன; மற்ற கட்சிகள் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்றவில்லை.இருப்பினும், வார்டு வாரியானநிலவரப்படி இடது முன்னணி 87 வார்டுகளிலும் (சிபிஎம் மட்டும்), திரிபுரா சுதேசி கட்சி 33 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி 14 வார்டுகளிலும் (காங்கிரஸ்மட்டும்) வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 173 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜகவுக்கு பெரும் பின்னடைவுகடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களை வென்ற பாஜக, தற்போது 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, கடந்த தேர்தலில் 16 இடங்களில் மட்டுமே வென்ற திப்ரா மோதா, இம்முறை 24 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்

மூலம் திரிபுரா பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடிகிடைத்துள்ளது.

பெரும் முறைகேடு நடைபெற்றது ஜிதேந்திர சௌத்ரி குற்றச்சாட்டு

திரிபுரா பழங்குடி மாவட்டக் கவுன்சில் தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாகக் கட்சியின் மாநிலச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திரசௌத்ரி செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில்,‘திங்கள்கிழமை நடைபெற்ற திரிபுரா பழங்குடித் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் (TTAADC) தேர்தல் வாக்குஎண்ணிக்கையின்போது பெரும் முறைகேடுகள் நடைபெற்றன. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியினரை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர்; ஆனால் தற்போது, எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உள்ளே அனுமதிக்காத புதிய கலாச்சாரத்தை பாஜகவினர் கடைப்பிடிக்கின்றனர்.

அதேசமயம், பல்வேறு மையங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்புப் குறைபாடுகளும் இருந்தன. சில பகுதிகளில்பதற்றம், போராட்டங்கள் மற்றும் மோதல்களும் நடைபெற்றன. கோவாயில் பாதுகாப்புப் படையினர் தடியடிநடத்தினர். பல பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், திரிபுரா மாநிலத்தின்மலைப்பகுதிகளில் பாஜகவுக்கு எதிரான பலமான சூழல் உருவாகியுள்ளது” என அவர் கூறினார்.