‘திப்ராலாந்து’தனி மாநில கோரிக்கை மோடி அரசுக்கு எதிராக நெருக்கடியை தீவிரப்படுத்தும் கூட்டணிக் கட்சி
yesterday
<p><strong>‘திப்ராலாந்து’தனி மாநில கோரிக்கை மோடி அரசுக்கு எதிராக நெருக்கடியை தீவிரப்படுத்தும் கூட்டணிக் கட்சி </strong></p><p>வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜகவின் மாணிக் சாஹா உள்ளார். அதே போல அமைச்சரவையில் திரிபுராபழங்குடி மக்கள் முன்னணியும் (ஐபிஎப்டி) உள்ளது. ஐபிஎப்டி கட்சியின் மூத்த தலைவர் சுக்லா சரண் மாநிலத்தின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராக உள்ளார்.இந்நிலையில், ஐபிஎப்டி கட்சி தனது‘திப்ராலாந்து’ தனி மாநில கோரிக்கை மூலம் மோடி அரசுக்கு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்ததொடங்கியுள்ளது. திரிபுரா பழங்குடியினர் பகுதியான தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (TTAADC) மற்றும் அதைஒட்டிய பகுதிகளை உள்ளடக்கி ‘திப்ராலாந்து’ என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே ஐபிஎப்டி-யின் கோரிக்கையாகும். </p><p>2009ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதியை திப்ராலாந்து கோரிக்கை நாளாக அக்கட்சி அனுசரித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திப்ராலாந்து கோரிக்கை நாளான ஞாயிறன்று(ஆகஸ்ட் 23) நடைபெற்ற விழாவில் ஐபிஎப்டி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சுக்லா சரண்,”திரிபுராஅரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாங்கள்இருக்கிறோம். ஆனாலும் எங்களது ‘திப்ராலாந்து’ கோரிக்கை தொடரும். எங்களது கோரிக்கையை ஒன்றிய அரசுநிறைவேற்ற வேண்டும். அதில் எவ்வித சமரசமும் இல்லை. கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து நாடுவோம்” என அவர் கூறினார்.</p>
