தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரிபுராவில் அதிர்ச்சி : டிஜிபி துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

20 Jul 2026, 9:47 pm
திரிபுராவில் அதிர்ச்சி : டிஜிபி துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

திரிபுராவில் அதிர்ச்சி : டிஜிபி துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

அகர்தலா பாஜக ஆளும் திரிபுரா மாநி லத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) இருப்பவர் அனுராக் தன்கர். 2025ஆம் ஆண்டு மே மாதம் திரிபுரா டிஜிபியாக பதவி யேற்றார்.

இந்நிலையில், திங்களன்று மதியம் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள டிஜிபி அலுவ லகத்தின் முதன்மை அறையில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உதவியாளர் மற்றும் பாதுகா வலர்கள் உள்ளே சென்று பார்த்த போது கழி வறையில் டிஜிபி அனுராக் தன்கர் துப்பாக்கி யுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடி யாக அகர்தலாவில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு அனுராக் தன்கர் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோ தித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எனினும் சுமார் 40 நிமிடங்கள் அவருக்கு தீவிர சிகிச்சை (சிபிஆர்) அளிக்க முயன்றும், உயிரை மீட்க முடியவில்லை. மதியம் 12:48 மணிக்கு அவர் உயிரிழந்ததாக கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவ மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணை யில் அனுராக் தன்கர் தன்னைத்தானே துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க லாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் முழு மையான விசாரணை மூலமே அனுராக் தன்கரின் உயிரிழப்பு தொடர்பான காரணம் வெளியாகும் என அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளன. உயிரிழந்த அனுராக் தன்கர் 1994ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சுமார் 16 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்திலேயே பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, எல்லை பாது காப்பு, சிபிஐ மற்றும் உளவுத்துறை சவால்க ளை திறம்பட எதிர்கொண்டவர். விளம்பரங்க ளைத் தவிர்த்து, பொறுப்புடன் பணியாற்றுவ தில் பெயர் பெற்றவர். இத்தகைய சூழலில், அனுராக் தன்கரின் திடீர் மறைவு, காவல்துறை வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரிக்கு அனுமதி மறுப்பு

திரிபுரா காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தன்கரின் மரணம் குறித்த தகவல் அறிந்ததும், மாநில எதிர்க்கட்சித் தலைவரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ருமான ஜிதேந்திர சவுத்ரி, சிபிஎம் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் ஆகியோர் கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு சென்றனர். இருவ ரும் டிஜிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற போது, மேற்கு திரிபுரா மாவட்ட ஆட்சி யர் விஷால் குமார்,”உங்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது” என்று கூறி, அனுமதி மறுத்தார். மரணத்தில் மர்மம் இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் ஜிதேந்திர சவுத்ரி பேசுகையில்,”அரசு ஏன் தங்க ளை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை? இந்தத் தடுப்பு நடவடிக்கை, டிஜிபியின் மரணத்தில் உள்ள மர்மத்தையே அதிகரிக்கிறது. இது சாதாரண மரணம் அல்ல என்ற சந்தே கத்தையும் வலுப்படுத்துகிறது. மாநிலத்தின் உயரிய காவல் அதிகாரி மரணமடைந்த விவகா ரத்தில், பொதுமக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்றால், ஒரு நேர்மையான மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.