திரிபுராவில் பாஜக குண்டர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை தடையை தகர்த்து தோழர் பாதல் ஷீலுக்கு செங்கொடியுடன் அஞ்சலி செலுத்திய ஜிதேந்திர சவுத்ரி
16 Jul 2026, 9:08 pm

திரிபுராவில் பாஜக குண்டர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை தடையை தகர்த்து தோழர் பாதல் ஷீலுக்கு செங்கொடியுடன் அஞ்சலி செலுத்திய ஜிதேந்திர சவுத்ரி

அகர்தலா பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்த லின் போது, பெலோனியா உட்பிரிவில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டி யிட்ட பாதல் சந்திர ஷீலை (பெலோனியா துணைப்பிரிவுக் குழுவின் உறுப்பினர்) அப் பகுதியைச் சேர்ந்த பாஜக குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சந்திர ஷீல், அகர்தலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2026ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று உயிரி ழந்தார். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப் பட்டனர். சமீபத்தில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். எனினும் சிபிஎம் நடத்திய சட்டப் போராட்டத்தில் உயர்நீதிமன்றம் 7 பேரின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பியது.

இந்நிலையில், பாதல் சந்திர ஷீல் உயி ரிழந்து ஓராண்டை கடந்துள்ள சூழலில், புதனன்று சிபிஎம் சார்பில் நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. திரிபுரா காவல்துறை இந்த அஞ்சலி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது. சிபிஎம் மாநிலச் செயலாளரும், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி, மாநில செயற்குழு உறுப்பினர் சுதன் தாஸ், சட்டமன்ற உறுப்பினர் திபாங்கர் சென் மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டச் செயலாளர் தபஸ் தத்தா ஆகியோர் தலைமையில் சோட்டாக்கோலாவில் உள்ள தியாகி பாதல் ஷீலின் நினைவுத் தூணை நோக்கி செங்கொடி ஊர்வலம் துவங்கியது. நூற்றுக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். பாஜக குண்டர்கள் அட்டூழியம் சோட்டாக்கோலா அருகே சென்ற போது பாஜக குண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அதாவது,”பாதல் சந்திர ஷீல் கொலை வழக்கில் ஏன் எங்கள் ஊர் மக்களை சிறையில் அடைக்க புகார் கொடுத்தீர்கள்?” என கேள்வி எழுப்பி, ஊர்வலத்தை தடுக்க முயன்றனர். எனினும் பாஜக குண்டர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சிபிஎம் ஊர்வலம் வந்த போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று காவல்துறையினரும், ஊர்வலத்தை பாதி யிலேயே தடுத்து நிறுத்த முயன்றனர்.

காவல்துறையினரின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு ஜிதேந்திர சவுத்ரி தலைமை யில் ஊர்வலத்தில் பங்கேற்ற தலைவர்கள், கட்சி ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இறுதியில் காவல்துறையினர் மேற் கொண்ட அனைத்து தடுப்பு முயற்சிகளையும் மீறி, சிபிஎம் ஊர்வலம் தியாகி தூணை அடைந்தது. ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்ட தலை வர்கள், தோழர் பாதல் சந்திர ஷீலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

செங்கொடி ஊர்வலம் என்றாலே பயம் அதிரடிப்படையை களமிறக்கிய திரிபுரா பாஜக அரசு

‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஊர்வலம்’ என்றாலே பாஜக விற்கு அதிக பயம் உள்ளது அறிந்த விஷயம்தான். இதற்கு சோட்டாக்கோலா சம்பவமும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும். பொதுவாக ஒரு ஊர்வலத்தை தடுக்க வேண்டும் என்றால், மாநில அரசு தடுப்புகளுடன் காவல்துறையை களமிறக்கும். ஆனால் சிபிஎம் சோட்டாக்கோலா ஊர்வ லத்தைத் தடுக்க திரிபுரா பாஜக அரசு வன்முறை பகுதிக்கு அனுப்பும் அதிரடிப் படையை களமிறக்கியுள்ளது. எனினும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜிதேந்திர சவுத்ரி தலைமையில் பங்கேற்ற தோழர்கள், அதிரடி படையின் மிரட்டலையும் எதிர்த்து ஊர்வலத்தில் தொடர்ந்து பங்கேற்றனர்.

பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும்

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில்,”எத்தகைய தடைகள் வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தியாகி தோழர் பாதல் சந்திர ஷீலுக்கு சிபிஎம் அஞ்சலி செலுத்தும். திரிபுரா பாஜக அரசும், சட்டம்-ஒழுங்கு நிர்வாகமும் சமூக விரோதிக ளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எதிர்த்து எங்களது போராட்டம் தொடரும். திரிபுராவில் பாஜக ஆட்சியை அகற்றி, ‘குண்டா ராஜ்’ எனப்படும் ரவுடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் முன்வரவேண்டும்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.