தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயங்கொண்டம் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

16 Nov 2025, 3:30 pm
ஜெயங்கொண்டம் கிளை  நூலகத்தில் முப்பெரும் விழா
<p><strong>ஜெயங்கொண்டம் கிளை &nbsp;நூலகத்தில் முப்பெரும் விழா</strong></p> <p>அரியலூர், நவ.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் முழு நேர கிளை நூலகத்திற்கு இடத்தினை தேர்வு செய்து, புதிய நூலக கட்டிடத்தைக் கட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த &nbsp;ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணனுக்கு பாராட்டு விழா, நூலக வார விழா, நூலக புரவலர் சேர்க்கை விழா என முப்பெரும் விழா வாசகர் வட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்றது. &nbsp;முன்னதாக நூலகர் மற்றும் வாசகர் வட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் வரவேற்றார். ஜெய ங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் சிறப்பு ரையாற்றினார். மாவட்ட நூலக அலுவலரும், கிராம நிர்வாக அலுவலருமான இரா.வேல்முருகன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சிக்கு 16 ஆவது வார்டு கவுன்சிலர் சுந்தராபாய் ராபர்ட், வாசகர் வட்ட துணைத் தலைவர் சுந்தரேசன், வாசகர் வட்டப் பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தினர். செங்குந்தபுரம் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். &nbsp;நூலக புரவலர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் ரூ.5000 வழங்கிய புரவலர்களான ராசி பில்டர்ஸ் உரிமையாளரும், பொறியாளருமான சிவகுமார், ஓய்வுபெற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலர் சி.பி.ராஜா ஆகியோரையும், ஆயிரம் ரூபாய் வழங்கிய புரவலர்களையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சால்வை அணிவித்து கௌரவித்தார். &nbsp;இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நூலக புரவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட துணைச் செயலாளர் ந.வேல்முருகன் நன்றி தெரிவித்தார். &nbsp;நூலகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த புரவலர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், எம்எல்ஏ மூலம் ரூ.25 ஆயிரம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டது. மேலும், நூலகத்திற்கு சுற்றுச்சுவர், தரை தளம் அமைக்கவும், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக படிக்க ஏதுவாக மேல் தளத்தில் மேற்கூரையும் அமைத்து கொடுக்க ஜெயங்கொண்டம் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. &nbsp;இதுகுறித்து, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.