முந்தய பக்கம்

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் முப்பெரும் விழா

16 Nov 2025, 3:30 pm
அறந்தாங்கி செலக்சன் பள்ளியில்  முப்பெரும் விழா
<p><strong>அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் &nbsp;முப்பெரும் விழா</strong></p> <p>அறந்தாங்கி, நவ.16- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் &nbsp;25 ஆவது ஆண்டு வெள்ளி விழா, விளையாட்டு விழா, குழந்தைகள் தின விழா மற்றும் உலக நீரழிவு தினம் என முப்பெரும் விழா நடைபெற்றது. &nbsp;விளையாட்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்றார். பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றுப் பேசினார். &nbsp;ஒலிம்பிக் தீபத்தை அறந்தாங்கி காவல்துறை காவல் ஆய்வாளர் செந்தூர பாண்டியன் &nbsp;துவக்கி வைத்து, தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்கள் தீபத்தை ஏந்தி வர, புதுக்கோட்டை மாவட்டத்தின் விளையாட்டு கல்வி ஆய்வாளர் தங்கராஜ் &nbsp;தீபத்தை ஏற்றி வைத்து, நிகழ்வை துவக்கி வைத்தார். &nbsp;ஒலிம்பிக் கொடியை அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு அலுவலர் &nbsp;சகாதேவன், அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் தலைவர் ரவிசங்கர், செயலாளர் காசிநாதன், முன்னாள் தலைவர்கள் செந்தில் குமார், தெட்சிணாமூர்த்தி, வருங்கால தலைவர் வீரையா, துணை ஆளுநர் பிரேம்குமார், ஆகியோர் சிறப்பித்தனர். &nbsp;சிறப்பு அழைப்பாளர் டாக்டர் பழனிவேல் ராஜன் நீரழிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். &nbsp;மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பள்ளியின் இருபால் பெற்றோர் பங்கேற்றனர். &nbsp;நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தனர். பள்ளி துணை முதல்வர் கங்கா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram