கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 Nov 2025, 1:26 pm

சுண்ணாம்பு பாறைக்கு சுற்றுலா

சேலம், நவ.14- ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு சுற் றுலாத் தலத்தில் பண்டைய பழங்கால பழங்குடி மக்க ளின் வாழ்க்கையை அறியும் வகையில் குண்டூர் பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்பு பாறை குகை செல்ல ஏற்காட் டில் இருந்து நான்கு கிலோமீட்டர் நடைபயண மாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியா னது. சுண்ணாம்பு குகைப் பாறையை காண தற்போது சுற்றுலா பயணிகள் மத்தி யில் வரவேற்பை பெற் றுள்ளது.

வனப்பகுதியில் ரோலக்ஸ் விடுவிப்பு

கோவை, நவ.14- தொண்டாமுத்தூர் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானையை வனத்துறை கண்கா ணிப்புக்கு பிறகு ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியதோடு, விவசாயி களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற யானையை பிடித்து, இடம் மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் கடந்த அக்.17 ஆம் தேதி தொண்டாமுத்தூர் அருகே ரோலக்ஸ் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட யானையை டாப்ஸ்லிப் வரகழியாறு யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரோலக்ஸ் யானை வியாழனன்று அதிகாலை ஆனைமலை புலிகள் காப்ப கம், முந்திரி மட்டம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக் கப்பட்டது. மேலும் யானையை தொடர்ந்து கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.

தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

தருமபுரி, நவ.14- நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த பண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம். விவசாயி-யான இவர் தனது வீட்டில் 10 ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வியாழனன்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, ஞானம் மற்றும் அவரது குடும்பத்தினர் கொட்டகைக்கு சென்று பார்த்தனர். அங்கு 8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து ஆடு களை கடித்து குதறிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். நாய்களை துரத்திவிட்டு சென்று பார்த்த போது, 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் அதிகளவு தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், கால்நடைகளை கடித்து விடுவதாகவும், குழந்தைகளை கூட துரத்துவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த ஆடுகளின் உரி மையாளருக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.