முந்தய பக்கம்

மக்களவை சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் ஆதரவு

7 Mar 2026, 2:36 pm
மக்களவை சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் ஆதரவு
<p><strong>மக்களவை சபாநாயகருக்கு &nbsp;எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமுல் ஆதரவு</strong></p> <p>நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று மீண்டும் தொடங்குகிறது. இது இரண்டா வது அமர்வு ஆகும். முதல் அமர்வு பிப்., 1ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரை &nbsp;நடைபெற்றது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளில் (திங்களன்று) மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அறிவித்துள் ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,&ldquo;மக்களவை சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வரும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் இணைந்தே இருக்கும்&rdquo; எனக் கூறியது. &nbsp;சபாநாயகர் ஓம் பிர்லா வெளிப்ப டையாக ஒருதலைப்பட்சமாக செயல்படு வதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவி யிலிருந்து நீக்கக் கோரி 118 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர். இந்த நோட்டீஸில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கையெழுத்திடாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram