பாஜக கால் பதிக்க உதவிய திரிணாமுல்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>பாஜக கால் பதிக்க உதவிய திரிணாமுல்</strong></p>
<p>பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் மேற்கு வங்கத்தில் அவர்கள் கால் பதிக்க உதவியவர்களாவர். 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் டம்டம் தொகுதியில் பாஜகவின் தபன் சிக்தர் வெற்றி பெறுகிறார். அவர்தான் மேற்கு வங்கத்தின் முதல் பாஜக எம்.பி. ஆவார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்திருந்தது. 1999இல் நடந்த அசோக் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் ஆதரவுடன் பாஜக வெற்றி பெற்றது. அதில் வென்ற பாதல் பட்டாச்சார்யாதான் பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரா வார். அவர்களுக்காக உழைத்து உள்ளே நுழைய விட்டதே திரிணாமுல் காங்கிரஸ் தான். இப்போது எதிர்ப்பு நாடகமாடு கிறார்கள் என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.</p>
<p> </p>
