சிதறும் திரிணாமுல் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும் ராஜினாமா
7 Jun 2026, 9:39 pm

சிதறும் திரிணாமுல் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும் ராஜினாமா

கொல்கத்தா தொடர்ச்சியாக 15 வரு டம் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணா முல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் சுக்கு நூறாக சிதறி வருகிறது.

கடந்த வாரம் ரிதாப்ரதா பானர்ஜி 60 எம்எல்ஏக்கள், 20 எம்.பி.,க்களை பாஜக ஆதரவுடன் வளைத்து திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துள்ளார்.

மேலும் எனது ஆதரவில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.,க்களே உண்மையான திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என ரிதாப்ரதா பானர்ஜி சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கடிதம் அளித் துள்ளார். இதனால் திரிணாமுல் தலைவரும், முன்னாள் முதல மைச்சருமான மம்தா பானர்ஜி கடந்த ஒரு வாரமாக மூத்த தலை வர்களுடன் தொடர் ஆலோசனை யில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மம்தா பானர் ஜிக்கு மிக நெருங்கியவரும், திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறு பான்மையினர் பிரிவு செயலாளரு மான அஜ்மல் சித்திகி தனது பதவி யை ராஜினாமா செய்வதாக அறி வித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”இன்று அபிஷேக் பானர்ஜி என்ற ஒரே ஒரு மனிதரால் தான் திரிணாமுல் வீழ்ந்து கொண்டிருக்கி றது.

அவரது சர்வாதிகாரப் போக்கு தாங்க முடியாததாக உள்ளன. திரி ணாமுல் என்ற அமைப்பு இப்போது பொதுமக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து விலகிவிட்டது. நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பினேன்.

திரும்பியதும், இந்த கட்சி அவப்பெயரைத் தவிர வேறு எதையும் தராது என்று முடிவு செய்தேன். திரிணாமுல் கட்சியின் தலைவர்கள் மீது ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும் பல வெளிவரக் கூடும் என்ற நம்பிக்கை என்னிடமே உள்ளது. அதனால் இந்த கட்சி யில் நீடிப்பது எங்களுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.

திரிணாமுல் மக்களுக்காக எந்தவொரு உண் மையான பணியையும் செய்ய வில்லை. இனிமேலும் வாய்ப் பில்லை. இதனால் ராஜினாமா செய் வதே சிறந்தது என்று முடிவு செய் தேன்” என்று அவர் கூறினார். அஜ்மல் சித்திகி தனியாக கட்சியை விட்டு விலகவில்லை. முக் கிய தலைவர்கள், நூற்றுக்கணக் கான தொண்டர்களுடன் திரிணா முல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.