சித்தாந்தம் இல்லாத ‘சரக்கு’
1 Jun 2026, 9:59 pm
<p><strong>சித்தாந்தம் இல்லாத ‘சரக்கு’</strong></p><p>: கலகத்தில் சிக்கிய திரிணாமுல்! “வெற்றியைப் போல வெல்வது எதுவுமில்லை; தோல்வியைப் போல தோற்பது எதுவுமில்லை” என்பார்கள். ஒரு தோல்வியிலும் அரசியல் இயக்கம் சிதையாமல் இருக்க வேண்டுமானால், அதற்கு உறுதியான சித்தாந்த அடிப்படை தேவை. அது இல்லாததால் தான் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இன்று சீட்டுக் கட்டுப் போலச் சரிந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்த ஒரே மாதத்திற்குள் சுகெந்து சேகர் ராய், ககோலி கோஷ், குணால் கோஷ், மனோஜ் திவாரி, அதின் கோஷ் உள்ளிட்ட பல நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். நூற்றுக் கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சிப் பதவிகளைத் துறந்து ஓடுகிறார்கள். ஆட்சி அதிகாரம் என்ற ‘பசை’ இல்லா விட்டால், சித்தாந்தமற்ற அரசியல் அமைப்புகள் எப்படிச் சிதையும் என்பதற்குத் திரிணாமுல்லே நடப்புச் சாட்சி!</p>
