கடைசி நேரத்தில் போட்டியிடாமல் ஓட்டம் பிடித்த திரிணாமுல் வேட்பாளர் பால்டா தொகுதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு
21 May 2026, 9:22 pm

கடைசி நேரத்தில் போட்டியிடாமல் ஓட்டம் பிடித்த திரிணாமுல் வேட்பாளர் பால்டா தொகுதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 293 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டன. அங்கு பாஜக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. முறை கேடு காரணமாக பால்டா தொகுதி யின் வாக்கு எண்ணிக்கை முடிவு மே 3 அன்று நிறுத்தப்பட்டது. தொ டர்ந்து அத்தொகுதிக்கு மே 21 அன்று சட்டமன்றத் தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறி வித்தது. இடது முன்னணி சார்பில் ஷம்பு குர்மி, பாஜக சார்பில் தேவ சங்சு பாண்டா, காங்கிரஸ் சார்பில் அப்தூர் ரசாக், திரிணாமுல் காங்கி ரஸ் சார்பில் ஜஹாங்கீர் கான் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தொடர்ந்து வியாழனன்று பால்டா தொகுதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6:00 மணி நிலவரப்படி அத்தொகுதியில் 65% வாக்குகள் பதிவாகின.

ஆனால் வாக்குப் பதிவு நடை பெற இரண்டு நாட்களுக்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரென மே 19 அன்று போட்டியிலிருந்து விலகி னார். தொடர்ந்து அவர் தலைமறை வானார்.

திரிணாமுல் மழுப்பல்

ரிணாமுல் மழுப்பல் இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கூறுகையில்,“ஜஹாங்கீர் கானின் இந்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு ஆகும். இதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை” என அறிவித்தது. அதே போல ஜஹாங்கீர் கானின் ஆத ரவாளர்கள்,“தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து பால்டா தொகுதி யில் மட்டும் தங்களது கட்சியின் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எங்களின் உள்ளூர் பலத்தை வெகு வாகக் குறைத்தது. முடிவுகள் வெளி யான உடனே ஜஹாங்கீர் கானின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதனால் போட்டியிலிருந்து வெளியேறி னோம்” என அவர்கள் கூறினர். 15 வரு டம் தொடர்ச்சியாக மேற்கு வங்கத் தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி தோல்வி பயத்தில் பால்டா தொகுதியில் ஓட்டம் பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.