தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை

1 Jun 2026, 11:01 pm
திருச்சியில் மாநில அளவிலான  இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை

திருச்சியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை

திருச்சி, ஜூன் 1- திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி’ (TASS) சார்பில், கல்லூரி மாண வர்களுக்கான மாநில அளவிலான ‘இளைஞர் வானியல் மற்றும் விண் வெளி அறிவியல் மாநாடு’ (YASSC – 2026) இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது.

முன்னணி அறிவியல் நிறுவனங்கள் கூட்டு இளைஞர்களிடம் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் சிந்த னையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு, இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகள் ஆலோசகர்களாக இருந்து ஆதரவளித்து வருகின்றனர்.

சென்னை கணித அறிவியல் நிறுவனம் (IMSc), பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST), அறிவியல் பலகை, எய்ட் இந்தியா மற்றும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (RRF) ஆகிய முன்னணி அறிவியல் நிறு வனங்களின் ஒத்துழைப்புடன் இம்மாநாடு நடைபெறுகிறது.

ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க அழைப்பு “அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைத்தல்” (Bridging Science, Technology & Society) என்ற முதன்மை முக்கி யத்துவம் வாய்ந்த கருப்பொரு ளின் கீழ் இம்மாநாடு வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதில் விண்வெளி ஆய்வுகள், உயர் இயற்பியல், கோள்களுக்கு இடையே யான பயண தொழில்நுட்பங்கள், இந்தியாவில் வானியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம்.

மேலும், அறிவியல் கண்காட்சி, போஸ்டர் மற்றும் மாதிரி விளக்கங்கள், வானியல் புதிர்கள், அறி வியல் விளையாட்டுகள் மற்றும் முன்னணி விஞ்ஞானிகளுடனான நேரடி கலந்துரையாடல், அறிவியல் எழுத்துப் பயிற்சிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறவுள்ளன.

10 மண்டலங்களில் தேர்வுகள் பொறியியல், கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் வானியலில் ஆர்வமுள்ள இளை ஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க லாம்.

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டு ரைகள் அல்லது புதிய அறிவியல் திட்ட யோசனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 10 மண்டல அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாநில அளவிலான மாநாட்டிற்கு மாண வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்வெளி அறிவியல் துறையில் எதிர்கால ஆராய்ச்சியாளர்களை உரு வாக்கும் இந்த அரிய வாய்ப்பை மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி யின் பொதுச்செயலாளர் ஜெ.மனோகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணைச் செயலாளர் பி.மோசஸ், தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி செயலாளர் தி.சாந்தி, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் சு.ஜெய பால், தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி இணையவழிப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ஆண்டி ராஜ், திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணையவழி ஒருங்கிணைப்பா ளர் மு.ரிஷிகேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.