மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி சிபிஎம், விசிக 2 நாட்கள் போராட்டம் வெற்றி ரூ.14 லட்சம் இழப்பீடு கிடைத்தது
20 May 2026, 10:19 pm

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி சிபிஎம், விசிக 2 நாட்கள் போராட்டம் வெற்றி ரூ.14 லட்சம் இழப்பீடு கிடைத்தது

திருச்சிராப்பள்ளி, மே 20- திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ்(25) என்ப வர், துவாக்குடி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டூல் பேப் (TOOL FAB) தொழிற்சாலை யில் வெல்டிங் தொழிலாள ராக பணியாற்றி வந்தார்.

மே 17 அன்று இரவு வழக்கம்போல பணியில் ஈடு பட்டிருந்த அவர், மே 18 அதி காலை சுமார் 2.30 மணியள வில் வெல்டிங் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர் கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல் லாதது, மின் சாதனங்கள் முறையாக பராமரிக்கப்ப டாதது, தொழிலாளர் களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டது போன்ற காரணங்களாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர். உயிரிழந்த சரண்ராஜின் குடும்பத்திற்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும், விபத்திற்குப் பொறுப்பான தொழிற்சாலை நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை களை கட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து உடலை வாங்க மறுத்து தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிர மடைந்த நிலையில், திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடு ஞ்சாலையில் மறியல் போரா ட்டமும் நடைபெற்றது.

இத னால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கும் மருத்து வமனைக்கும் வந்து அதி காரிகள், காவல்துறை மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் உரிய நிவாரணம் அறிவிக்கப்படும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மறுத்தனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற தொடர் போ ராட்டத்தின் விளைவாக, டூல் பேப் நிறுவனம் உயிரிழந்த சரண்ராஜின் குடும்பத்திற்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது.

மேலும், தொழிலாளருக்குச் சேர வேண்டிய பி.எஃப்., இ.எஸ்.ஐ., விபத்து காப்பீடு உள்ளிட்ட அனைத்து தொழி லாளர் நலத் தொகைகளை யும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்தது.

இதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப் பட்டு, உயிரிழந்த சரண்ரா ஜின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

இச்சம்பவம் தொழிற்சாலை களில் தொழிலாளர் பாது காப்பு எவ்வளவு அவசியம் என்பதை மீண்டும் நினை வூட்டுவதாக சமூக ஆர்வ லர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பா. லெனின், ஏ. மல்லிகா, ரஜினி காந்த், மாவட்டக் குழு உறு ப்பினர் தெய்வநிதி, திரு வெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குருநாதன், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் குமார், சித்ரா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலா ளர் மூ. திலீபன் ரமேஷ், நிர்வாகி சிறுத்தை குணா, வழக்கறிஞர்கள் தீனா, ராஜ் குமார் உள்ளிட்டோர் இரண்டு நாட்களாக போராட்டத்தை முன்னின்று நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவார ணம் கிடைக்க முக்கிய பங்காற்றினர்.