திருச்சி விரைவு செய்திகள்
12 Jun 2026, 9:33 pm

நடக்க இருப்பவை

தியாகி ராமநாதன் நினைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் ஜூன் 20 மாலை 4 மணி அளவில் பொதுக்கூட்டம். பங்கேற்போர்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன்.

கனரக வாகனம் பழுது நீக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சிவகாசி, ஜூன் 12- சிவகாசியில் கனரக வாகனங்களை பழுது நீக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி- சாத்தூர் செல்லும் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கனரக வாகனங்கள் பழுது நீக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இத்தீயானது மளமளெவெனப் பரவியது. இதனால் பெரும் தீ மூட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தீப்பற்றியது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஜீப், நான்கு சக்கர வாகனங்கள் 3, இரு சக்கர வாகனங்கள் 3 ஆகியவை தீயில் எரிந்து சேதமா னது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் : கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

விருதுநகர்,ஜூன் 12- விருதுநகர் அக்ரகாரம் தெருவில் பலசரக்கு கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.50ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (56). இவர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அக்ரஹாரம் தெருவில் பலசரக்குக் கடை நடத்தி வரு கிறார். இவர் விழயானன்று வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையைப் பூட்டிவிட்டு வழக்கம்போல் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், கடையின் பின்புறம் வழி யாக மாடிக்குவந்த நபர், , கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50ஆயிரம் பணத்தை திருடி விட்டு தப்பியோடியுள்ளார். இந்தநிலையில், வழக்கம்போல் கடையைத் திறந்த கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கார்த்திகேயன், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து விருதுநகர் மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவரை தாக்கி கொலை மிரட்டல் மகன், பேரன் மீது வழக்கு

தேனி , ஜூன் 12- போடியில் வெள்ளிக்கிழமை, முதியவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த முதியவரின் மகன், பேரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், போடி மேலத்தெரு வரகுணன் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி (85). இவருக்கு இரண்டு மகன்கள் ,ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் சுரேஷ் என்பவர் சொத்தை எழுதித் தரக் கேட்டு வந்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் சுரேசும், இவரது மகன் ஆதிசேசன் என்பவரும் பழனிச்சாமியை கையால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் , சுரேஷ், ஆதிசேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கட்சியிலிருந்து விலகல்

விருதுநகர்,ஜூன் 12- விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி.பாண்டுரங்கன் கட்சியின் மீது அதிருப்தியால் பாஜகவில் இருந்து விலகினார். விருதுநகர் பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக கடந்த நான்கு ஆண்டு களுக்கு மேலாக இருந்தவர் பென்டகன் ஜி. பாண்டு ரங்கன். இவர் கடந்த 2021 இல் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்விய டைந்தார்.இந்நிலையில் மீண்டும் 2026இல் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டது. இதனால் பாண்டுரங்கன் கட்சியின் மேலிடம் மீது அதிருப்தியடைந்தார். மேலும், கட்சி மேலிடம் மீது இவருக்கு ஒரு சரியான உறவு இல்லாத காரணத்தால் சில மாதங்களாக அதிருப்தியில் இருந்தார். எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கட்சி பணிகளில் ஈடுபடாமல் கட்சி நிர்வாகிகளிடம் எந்தவித தொடர்பிலும் இல்லை. எனவே, பாஜக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட வைத்தனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர விசுவாசி யாக இருந்தார் பாண்டுரங்கன். அவர் தனியாக இயக்கம் ஆரம்பித்துள்ளதாக அறிவித்த நிலையில் பாண்டு ரங்கன் தன்னுடைய கிழக்கு மாவட்ட தலைவர் உள்பட அனைத்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார். மேலும் பாஜக மேலிடத்திற்கு ராஜி னாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். இத னையடுத்து விருதுநகர் பாஜக நிர்வாகிகள் சிலரும் தங்க ளது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆண்டிபட்டி ஒன்றிய கண்மாய்களுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் வழங்கிடுக! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தேனி ,ஜூன்.12- ஆண்டிபட்டி ஒன்றிய கண்மாய்களுக்கு குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றிலிருந்து உபரி நீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி .வெங்கடேசன் , கே.எஸ்.ஆறுமுகம் , ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் (பொறுப்பு )எஸ். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. கால்நடைகள் குடிநீருக்கு ஏங்கும் நிலை உள்ளன. கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு உள்ள னர்.ஏராளமான விவசாயிகள் திருப்பூர் , கோவை போன்ற தொழில் நகரங்களு க்கு சென்று பிழைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குள்ளப்ப கவுண்டம்பட்டியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீரை ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்கவும் , மக்களின் குடிநீர் தேவைக்காக உதவும் படி மனுவில் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைத்திடுக மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அன்றாட வாடிக்கையாகிவிட்டது. அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்பு களை சந்தித்து வருகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க ஆண்டிபட்டி பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். ஆண்டிபட்டி பேரூராட்சி மயா னத்தில் இறப்பு சடங்குகள் திறந்தவெளி யில் நடந்து வருகிறது .பேரூராட்சி சார்பில் ஏற்கனவே மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. முடிவுற்ற நிலை யிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வில்லை .எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உடனடியாக மின்சார தகனம் மேடையை பயன்பாட்டு கொண்டு வரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது .

ஹரிஹரன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை, ஜூன். 12- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஹரிஹரனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்தி ரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முரு கானந்தம் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிஹரனும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. ஏப்ரல் 21-ஆம் தேதி தேவி செல்போன் மூலம் தகவல் தெரிவித்த தைத் தொடர்ந்து, ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், பின்னர் அவரைத் தேடியபோது கிடைக்காத நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதி குவாரி ஒன்றில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, பின்னர் சட்டப் பிரிவுகளை மாற்றியிருந்தாலும், இது ஆணவப் படுகொலை என பதிவு செய்யப்படவில்லை என்றும், பெண்ணின் குடும்பத்தினரே ஹரிஹரனை ஆணவப் படுகொலை செய்துள்ளதாக சந்தேகம் இருப்பதால், வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சட்டவிரோதமாக மதுவிற்ற நபர் கைது தேனி ஆட்சியர் நடவடிக்கை

தேனி ,ஜூன்.12- அகமலை மலை கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்ற நபர்,தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார் . தேனி மாவட்டம், அகமலை கிரா மத்தில் சில நபர்கள் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யில் சட்டவிரோதமாக மதுபாட்டில் களை விற்பனை செய்து வரு கிறார்கள் என தேனி மாவட்ட ஆட்சி யர் வைத்திநாதனுக்கு குறுஞ் செய்தி வரப்பெற்றது. இது தொ டர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் படி தேனி மதுவிலக்கு அம லாக்கப்பிரிவு காவல் துறை யினருக்கு உத்தரவிட்டார் .அத னைத் தொடர்ந்து அகமலை கிரா மத்தில் சோதனைகள் மேற்கொள் ளப்பட்டது . த.மணி என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்கள் வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்து மேற்படி நபரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.